புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் வீடுகளில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஊராட்சி கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் புதுக்கோட்டையிலுள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி முள்ளங்குறிசி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
இவரது சகோதரர் பழனிவேல் இவர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் சோலார் தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார்.
இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை, திருச்சி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் இன்று கடுக்காகாட்டில் உள்ள முருகானந்தம், பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோரது 3 வீடுகள், புதுக்கோட்டையில் உள்ள 2 வீடுகள் மற்றும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகம் ஆகிய இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982