தொழில்நுட்பம்

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைக் கைவிடும் மைக்ரோசாஃப்ட்: எட்ஜ் ப்ரவுசர் பயன்பாட்டை ஊக்குவிக்க திட்டம் | Microsoft begins journey to discontinue Internet Explorer

எட்ஜ் ப்ரவுசரின் பயன்பாட்டை அதிகரிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கான பயனர் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.

கூகுள் க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ் உள்ளிட்ட ப்ரவுசர்களின் வருகைக்குப் பிறகு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் தாக்கம் குறைந்தது. இதனால் எட்ஜ் பிரவுசரை ஐந்து வருடங்களுக்கு முன் மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்தது.

தற்போது சர்வதேச அளவில் இணையப் பயன்பாட்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு 5 சதவீத சந்தைப் பங்கு உள்ளது. இந்த ப்ரவுசரில் செயல்படாத இணையதளங்கள் தானாகவே மைக்ரோசாஃப்டின் எட்ஜ் ப்ரவுசருக்குச் சென்றுவிடும்.

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 1,156 தளங்களில் தற்போது இந்த வசதி உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் வேலை செய்யாத இணையதளங்களுக்குச் செல்லும்போது, எட்ஜ் ப்ரவுசரை விருப்பமான ப்ரவுசராக வைக்க பயனர்களுக்கு ஒரு கோரிக்கை வரும். மேலும், எக்ஸ்ப்ளோரரில் இருக்கும் அமைப்புகளை எட்ஜுக்கு மாற்றவும் கோரிக்கை வரும்.

நவம்பர் 13 ஆம் தேதி முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரிலிருந்து மைக்ரோசாஃப்ட் கணக்கில் லாகின் செய்ய முடியாது என ஏற்கெனவே அந்நிறுவனம் அறிவித்துவிட்டது. மேலும், மைக்ரோசாஃப்ட் 365 சேவைகள் எதுவும் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11-ல் வேலை செய்யாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடம் நவம்பர் 30 ஆம் தேதி முதல், மைக்ரோசாப்ஃட் டீம்ஸ் வெப் செயலி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11-ல் வேலை செய்யாது.

இந்தத் தேதிகளுக்குப் பிறகு இந்தச் செயலிகளின் செயல்பாடு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் முழு வீச்சில் இருக்காது அல்லது வேலை செய்யாது.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *