வெள்ளை ஆடை வெள்ளை மனம்//
மனம் முழுவதும் மற்றவர் சேவை//
சேவையால் உயர்ந்தாய் சேய்க்கு தாயாய்//
தாயானாய் மற்றவர்கள் குழந்தைக்கு செவிலித்தாயாய்//
செவிலித்தாயாய் வந்த மேன்மை தெய்வம்//
தெய்வம் நோயால் வாழும் உயிருக்கு//

உயிருக்கு ஊட்டினாய் அன்போடு ஔடதம்//
ஔடதமாம் உன் அன்பால் நீங்கியபிணி//
நீங்கியதுபிணி உன் அன்பால் விளைந்தமருந்தால்//
விளைந்தது அன்பெனும் மருந்தாய் உன்சேவை//
உன்சேவை நாளும் நானிலத்தில் தேவை//
தேவை அறிந்து செய்திடுவாய் சேவை//
சேவையால் உயர்ந்தாய் புவியில் செவிலித்தாயாய்//
கவிஞர் மா. கணேஷ்,
கொன்னையூர்.


























