திருச்சி மத்திய மண்டலத்தில் மூடப்படும் 75 டாஸ்மாக் கடைகளின் விவரம் | Details of 75 Tasmac Stores to be Closed on Trichy Central Zone
திருச்சி: மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 75 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று (ஜூன் 22) முதல் மூடப்படுகின்றன.
சட்டப்பேரவையில் மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அருகருகே உள்ள கடைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ளவை, நீதிமன்ற உத்தரவு உள்ளவை உள்ளிட்ட கடைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இன்று(ஜூன் 22) முதல் 500 கடைகள் மூடப்படும்என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், திருச்சி மாவட்டத்தில் வயர்லஸ் சாலை, பாபு ரோடு, பெரிய கடை வீதி, அண்ணாமலை நகர், தங்கேஸ்வரி நகர் வடக்கு, பிராட்டியூர் கிழக்கு, குழுமிக்கரை சாலை,
மெக்டொனால்ட்ஸ் சாலை, தேவதானம், கோணக்கரை சாலை,திண்டுக்கல் சாலை (சகாயம் பில்டிங்), நவல்பட்டு சாலை (திருவெறும்பூர்), காந்தி மார்க்கெட், செவலூர் (மணப்பாறை), கல்லக்குடி, பூவாளூர் கிழக்கு ஆகிய 15 கடைகள் மூடப்படுகின்றன. கரூர் மாவட்டத்தில் அண்ணா இந்திரா சாலை, வடக்கு பிரதட்சணம் சாலை, டீலக்ஸ் ஸ்டுடியோ அருகே, திரு.வி.க. சாலை, ஈசநத்தம் பிரதான சாலை (ராயனூர்), பாலம்மாள்புரம், முசிறி ரோடு (குளித்தலை) ஆகிய 7 கடைகள் மூடப்படுகின்றன.
புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை சாலை, கீரமங்கலம் பேருந்து நிலையம் பின்புறம், ஆலங்குடியில் பழைய நீதிமன்றம் அருகே, திருமயத்தில் பாம்பாற்று பாலம், அறந்தாங்கியில் சுபா திரையரங்கம் அருகே, ஒன்றிய அலுவலக சாலை, பேருந்து நிலையம் பின்புறம், கடை வீதி, கறம்பக்குடியில் திருவோணம் சாலையில் உள்ள 2 கடைகள், கீரனூரில் பேருந்து நிலையம் பின்புறம், கிள்ளுக்கோட்டை சாலை ஆகிய 12 கடைகள் மூடப்படுகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் கோனேரிபாளையம், உப்போடை, ஆத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம் ஆகிய 4 கடைகளும், அரியலூர் மாவட்டத்தில் ரயில் நிலையம், குரும்பஞ்சாவடி, ஐடிஐ, உடையார்பாளையம் ஆகிய 4 கடைகளும் மூடப்படுகின்றன. இது தவிர தஞ்சை, நாகை, திருவாருர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தம் 32 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.