முகம் பளபளக்க இயற்கை முறை அழகு குறிப்புகள்!
எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், முகத்தில் கரும்புள்ளிகள் குறையும்.
பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு கரும்புள்ளிகள் மறையும்.
வெள்ளரிக்காய் உருளைக்கிழங்கு தக்காளி ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கி கண்களுக்கு மேல் வைக்கவும், இப்படி செய்து வர கருவளையம் படிப்படியாக மறையும்.
சர்க்கரையை நீரில் கலந்து முகத்தில் ஸ்கரப் செய்தால், அது முகத்தில் வளரும் முடிகளை அகற்றும்.
கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ‘ஏ’ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும், அதனால் கருவேப்பிலையை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தக்காளிப் பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவி வர சருமத்தில் எண்ணெப் பசை குறையும். முல்தானிமெட்டியுடன் சிறிது பன்னீர் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் எண்ணைப் பசை குறையும்.
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புது பொலிவு பெறும்.
இரவு படுக்கும் முன் பசும்பாலுடன், தேன், குங்குமப்பூ, மஞ்சள் பொடி சேர்த்து கலந்து பருகிவர முகமும், உடலும் புதுப் பொலிவடையும்.
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதட்டில் தடவி வர, வெடிப்புகள் மறைந்து உதடு மென்மையாகும்.
தக்காளி சாறுடன் பால் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்தால் முகம் பொலிவடையும்.
நன்றி.... ஆதியா