கவிதைகள்செய்திகள்வாழ்வியல்

யானை ! கவிஞர் இரா .இரவி ! Poet Ira.Ravi

யானை ! கவிஞர் இரா .இரவி ! Poet Ira.Ravi

உருவத்தில் பெரியது
உண்ணவில்லை அசைவம்
யானை !

கரிய நிறம் கொண்ட வெள்ளை உள்ளம் !
கரும்பு தந்தால் விரும்பி நன்றாய் உண்ணும் !

உருவத்தில் பெரியது கண்கள் மட்டும் சிறியன !
உணவில் சைவம் மட்டுமே என்றும் உண்ணும் !

பூச்சிகள் செல்லாமலிருக்க காதுகளை ஆட்டும் !
பூவுலகில் அனைவரும் விரும்பிடும் அற்புத விலங்கு!

நின்றாலும் அழகு நடந்தாலும் அழகு !
நினைத்தாலும் அழகு பார்த்தாலும் அழகு !

மதம் பிடிக்காதவரை குழந்தையாக இருக்கும் !
மதம் பிடித்தாலோ மதம் பிடித்த மனிதனாகிவிடும் !

மிகப்பெரிய யானையை கோவில் பாகன்
மிக மோசமாக பிச்சை எடுக்க வைப்பான் !

வாங்கிய பணத்தை வாங்கிக் கொண்டு !
வாகனமாய் அமர்ந்து அங்குசத்தால் குத்துவான் !

பெரிய சங்கிலியை இழுத்து தோற்ற யானை !
சிறிய கயிற்றை இழுக்க முயற்சிக்கவில்லை !

காடுகளில் கூட்டமாக கூடி வாழும் !
கோவில்களில் தனியாக வாடி வாழும் !

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை !
குவளயத்தில் அனைவரும் அதிசயிக்கும் யானை !

மணி ஓசை வந்து விடும் முன்னே !
மணியாக நடந்து வரும் பின்னே !

நிலவும் யானையும் காதலியும் ஒன்று !
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *