உறவுகள்கதைகவிதைகள்காதல்வாழ்வியல்

விலையில்லா காதல்..❤️ கவிஞர் சூர்யா

“வெளியே வரமாட்டேன் சொன்ன” 🚪

உன் கூட மட்டும் . 🫥

“உன் ஓனர் விட மாட்டார் சொன்ன.” 💔

உன் கூட விடுவார் 🌙

“ஏன் என் மேல் நம்பிக்கையா” 🤔

இருக்கலாம் ஆனால் நீ ஒரு‌ மோகனமாணவன் ✨

“உனக்காக… இருக்கலாம்.” 💫

எனக்காகவா ..இந்த உடம்புக்காக.. 🫠

“இந்த ஊர்ல சதை விற்பனையாளர் ஏராளம்.” 🐓

பின்ன ஏன் என்கிட்ட நூறுமுறைக்கு மேல் வந்த.. ❓

“நான் கணக்கிடுவதில்லை…ஆனால் ஒவ்வொரு முறையும் உன் கூட வாழ்ந்து இருக்கேன் “.. 🕰️

உனக்கு நான் சலிக்கவில்லையா? 😐

“அழகுக்கு ஏதடி சுவை சலிப்பதற்கு அது அணுகுமுறை ஓர் அனுபவம்..ஒவ்வொருமுறையும் ஓர் அனுபவம்”… 🎭

நான் அவ்வளவு அழகு இல்லையே… 🙈

“விரும்பியவளை மோகம் மூட்டிவிட்டு அவள் முகத்தை பார் ..மூவுலகின் மொத்த அழகும் …அவள் விழிகளில் விம்மி உருளும்..காதலுடன் அதுதான் பேரழகு”…. 🌹 💖

என்னை‌ விரும்புறியா.. ❣️

“விரும்பாமல் நீ என் கூட நடப்பியா ?. 🧐

உனக்கு எது விருப்பம்…. ⚖️ “உன் கூட இருப்பது”.. 🤝

இல்லை…அந்த இருட்டு அறையில் நிர்வாண உடலில் .முட்டி வரும் மோகத்தோடுஉறவாடிஇருப்பதா. 🌑 🔥

இல்லை வெளிச்சம் நிறைந்த ராத்திரியில் . வாகன நெரிசல் மிகுந்த சாலையில் …ஓர் ஓரமாய் உடல் உரசி கை கோர்த்து நடப்பதா? .. 🚗 🌃

“அடியே….நீ இந்த உலகை என் கூட இருந்து பார்க்க ஆசைபடுகின்றாய் . 🌍

நான் உன்னை என் உலகமாய் பார்க்க விரும்புகின்றேன் .இரண்டும் இன்பமே”…. 🌟

இன்னும் கொஞ்சம் நடக்கலாம்.. 🕊️

“கொஞ்சமா? கொஞ்சி யா?” 🥺

போடா…நாளை வருவியா.. 📅

“இதிலென்ன கேள்வி.”… 🤭

நீ வருவதை எப்படி சொல்வாய் உன்னிடம்தான் என் நம்பர் இல்லையே.. 📵

“வழக்கம் போல் தான் .”. 😊

ஒன்னு கேக்கட்டா கோவப்படாத 😅

“என் வாழ்வு மேல் கோவமா?..”. 😌

நீ ஏன் இன்னும் என் மொபைல் நம்பர் கேக்கல.. 📲

நீ என் பேரு கேக்கும் போது …நானும் கேக்குறேன்.. 🙋‍♂️ ்

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *