செய்திகள்நம்மஊர்

ஹூப்ளி – காரைக்குடி இடையே கோடை கால சிறப்பு ரயில் | Summer Special Train Between Hubli – Karaikudi

காரைக்குடி: ஹூப்ளி – காரைக்குடி இடையே இன்று (ஏப்.28) கோடை காலச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஹூப்ளியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படுகிறது.

பிற்பகல் 2.40 மணிக்கு பெங்களூருவுக்கும், பிற்பகல் 3.16 மணிக்கு கிருஷ்ண ராஜபுரத்துக்கும், மாலை 6.45 மணிக்கு சேலத்துக்கும், இரவு 10.05 மணிக்கு திருச்சிக்கும், இரவு 11.23 மணிக்கு புதுக் கோட்டைக்கும் வரும். அதிகாலை 12.35 மணிக்கு காரைக்குடியை வந்தடையும். மறுநாள் (ஏப்.29) அந்த ரயில் பிற்பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு,

பிற்பகல் 12.45 மணிக்கு புதுக்கோட்டைக்கும், பிற்பகல் 2 மணிக்கு திருச்சிக்கும், மாலை 4.50 மணிக்கு சேலத்துக்கும், இரவு 8.26 மணிக்கு கிருஷ்ண ராஜபுரத்துக்கும், இரவு 8.45 மணிக்கு பெங்களுருவுக்கும் செல் லும். அதிகாலை 5.20 மணிக்கு ஹூப்ளியை அடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வரவேற்பைப் பொருத்து இந்த ரயில் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *