ஆங்கிலப் புத்தாண்டு நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் அடுத்த ஆண்டுக்குச் செல்லப் போகிறோம்.
பொதுவாகவே புத்தாண்டு பிறந்தவுடன் பெரும்பாலானோருக்கு தேதி/மாதம்/ வருடத்தைக் குறிப்பிட்டு எழுதுவதில் மறதி ஏற்படும். பழைய ஞாபகத்தில் முந்தைய ஆண்டையே எழுதிவிடுவோம்.
இந்த ஆண்டு புதிய குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், தேதியை எழுதுவோர் குறிப்பாக வரவு-செலவுக் கணக்குகளில் அதிகம் ஈடுபடுவோர் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது வழக்கமாக DD/MM/YY என்ற ரீதியில் புத்தாண்டு தினத்தை 01.01.20 என்று எழுதுவோம். ஆனால் அதற்குப் பதிலாக, 01.01.2020 என்று எழுதுங்கள். ஏனெனில் யாராவது அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, 01.01.2000 என்றோ, 01.01.2019 என்றோ கடைசி இரண்டு இலக்கத்தைச் சேர்த்துவிட வாய்ப்புண்டு. 2000 முதல் 2019 வரையிலோ ஏன் 01.01.2099 வரையிலோ கூட நீங்கள் எழுதியதையே மாற்றிவிடலாம்.
எனவே தேதியைக் குறிப்பிடும்போது கவனத்துடன் எழுதுங்கள். ஆவணங்களை வாங்கும்போதும் கொடுக்கும்போதும் இதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
பின்குறிப்பு: வரும் ஆண்டு மட்டுமே இதுபோன்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.



























