செய்திகள்நம்மஊர்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர் | 21 tn fishermen who were captured by Sri Lankan Navy have returned home

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் நேற்று தாயகம் திரும்பினர்.

கடந்த டிச. 6-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற உயிர்தராஜ் என்பவரது விசைப்படகையும், அதிலிருந்து 8 மீனவர்களையும் தலைமன்னார் அருகே இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல, புதுக்கோட்டைமாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து 2 விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் மற்றும் ஜெகதாப்பட்டினத்திலிருந்து ஒரு விசைப்படகில் கடலுக்குச் சென்ற 4 மீனவர்கள் என 13 மீனவர்களை நெடுந்தீவு அருகே கைது செய்த இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்தால் விடுவிப்பு: இந்நிலையில், டிச. 20-ம் தேதி மன்னார் நீதிமன்றத்தால் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரும், டிச. 21-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான 21 மீனவர்களும் நேற்று பிற்பகல் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

தொடர்ந்து, சென்னையில் இருந்து மீனவர்கள் 8 பேர் ராமேசுவரத்துக்கும், 13 மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் தனித்தனி வாகனங்களில் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் மூலம் நேற்றிரவு அழைத்து வரப்பட்டனர்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *