தலைவலி ஏற்படுவதற்கான காரணமும் அதற்கான தீர்வும் பாட்டி வைத்தியம்
தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு:
ஜலதோஷம் ஆரம்பத்திலே, காய்ச்சல் வருமுன்போ, கண்கோளாறு காரணமாகவும், பித்தம் காரணமாகவும், இரவில் தூக்கம் இல்லாமல் இருந்தாலும், காலையில் வெயிலிலும் அதிக நேரம் இருந்திருந்தால், நடந்திருந்தாலும் கூட தலைவலி வரும்.
பல் கோளாறு காரணமாகவும், அதிக உழைப்பின் காரணமாகவும், அதிக பசி ஏற்பட்டு உணவு உட்கொள்ளாமல் இருந்திருந்தாலும், மலச்சிக்கல் காரணமாகும், காப்பி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் குறித்த நேரத்தில் காபி குடிக்க தவறினாலும் தலைவலி வரும். இவ்வாறு பல காரணங்களால் தலைவலி வருவதுண்டு.
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் தவறும் காரணமாக தலைவலி ஏற்படும்.
தலைவலிக்கான தீர்வு :
1️⃣ குப்பை மேனி இலைச் சாற்றில் சுக்கைச் சந்தனம் போல உறைத்து இருபக்கப் பொட்டுகளிலும் கனமாகப் பூசி விட்டால் அது காய்வதற்குள் தலைவலி ஓடிவிடும்.
2️⃣ வெற்றிலையைச் சிறிது வட்டமாக வெட்டி அதை இருபக்க பொட்டுகளிலும் ஒட்டிவிட்டால் தலைவலி நின்றுவிடும்.
3️⃣ கற்பூரவள்ளி இலை யையும் இதேபோல் செய்தால் தலைவலி நின்றுவிடும்.
4️⃣ ஜாதிக்காயை கல்லில் உறைத்து அதை எடுத்து இருபக்கப் பொட்டிலும் கனமாகப் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகும்.
5️⃣ சாம்பார் வெங்காயத்தில் பெரிதாக ஒன்றை எடுத்து அதை குறுக்காக நறுக்கி இரண்டு பக்கப் பொட்டிலும் வைத்து நன்றாக தேய்த்தால் தலைவலி குணமாகும்.
6️⃣ 10 கிராம்பை மைபோல அரைத்து இருபக்கப் பொட்டுகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.
நன்றி…