அழகு கவிஞர் மா.கணேஷ்
தத்தைக்கு
மூக்கு
அழகு…
கயலுக்கு
கண்கள்
அழகு…
அன்னத்திற்கு
நடை
அழகு…
நிலவுக்கு
ஔி
அழகு…
வானிற்கு
நட்சத்திரம்
அழகு…
கதிரவனுக்கு
கதிர்
அழகு…
குயிலுக்கு
குரல்
அழகு…
மயிலுக்கு
தோகை
அழகு…
பறவைக்கு
இறகு
அழகு…
மானுக்கு
கொம்பு
அழகு…
வேளத்திற்கு
தந்தம்
அழகு…
சேவலுக்கு
கொண்டை
அழகு…
ஆற்றுக்கு
கெண்டை
அழகு…
தடாகத்திற்கு
தாமரை
அழகு…
முல்லைக்கு
கொடி
அழகு…
மேகத்திற்கு
வானவில்
அழகு…
மழைக்கு
நீர்துளி
அழகு…
மலைக்கு
முகடு
அழகு…
நித்திரைக்கு
நல்கனவு
அழகு…
விழிகளுக்கு
பார்வை
அழகு…
மலருக்கு
இதழ்
அழகு…
மார்கழிக்கு
பனி
அழகு…
மரத்திற்கு
கனி
அழகு…
கொள்கைக்கு
செயல்
அழகு…
பட்டாம்பூச்சிக்கு
வண்ணம்
அழகு…
கடலுக்கு
அலை
அழகு…
சிறுத்தைக்கு
வேகம்
அழகு…
சிங்கத்திற்கு
நடை
அழகு…
புலிக்கு
வால்
அழகு…
பூனைக்கு
மீசை
அழகு..
வில்லிற்கு
நாண்
அழகு…
சிப்பிக்குள்
முத்து
அழகு…
புல்லிற்கு
பனித்துளி
அழகு…
பனைக்கு
நுங்கு
அழகு…
தென்னைக்கு
கீற்று
அழகு…
மொழிக்கு
தமிழ்
அழகு…
மழலைக்கு
சிரிப்பு
அழகு…
மனிதருக்கு
மகிழ்ச்சி
அழகு…
பாருக்கு
பண்புள்ள மக்கள்
அழகு…
அகிலத்தில்
அனைத்தும்
அழகு…
நன்றி
கவிஞர் மா.கணேஷ்