கவிதைகள்வாழ்வியல்

என்னவள் !கவிஞர் இரா .இரவி !

நடந்து வரும் நந்தவனம் !
நடமாடும் நயாகரா !

வலம் வரும் வானவில் !
வஞ்சி வற்றாத ஜீவநதி !

பசிப் போக்கும் அட்சயப்பாத்திரம் !
பார்ப்பதற்கு அஜந்தா ஓவியம் !

சிரித்தால் ஜொலிக்கும் நட்சத்திரம் !
சிங்காரி அவள் சித்தன்னவாசல் !

கண்களால் பேசும் சிலை !
கண்டால் பேரின்ப நிலை !

மண்ணில் உள்ள சொர்க்கம் !
மாறாத நிரந்தர மார்கழி !

கர்வம் இல்லாக் கண்ணழகி !
காந்தப் பேச்சுக் குரலழகி !

வாசம் வீ சும் வனப்பழகி !
நேசம் காட்டும் பாச அழகி !

உலக அழகுகள் வியக்கும் அழகி !
உணர்வில் கலந்த உயிரழகி !

பெண்களே ரசிக்கும் பேரழகி !
நான் ருசிக்கும் கனியழகி !

அறிவில் அவள் அறிவாளி !
அவள் முன் நான் கோமாளி !

அத்தனை உவமைகளும் !
அற்புதமாய்ப் பொருந்தும் !

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *