கவிதைகள்வாழ்வியல்

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

தமிங்கிலப் பேச்சிற்கு முடிவு கட்டுவோம் !
தமிழோடு ஆங்கிலக் கலப்பின்றிப் பேசிடுவோம் !
ஆரம்பக்கல்வியை தமிழில் மட்டும் வழங்குவோம் !
அதன் பின் மற்ற மொழிகள் எதுவும் படிக்கட்டும் !
அப்பா அம்மா என்றழைப்பதைக் கட்டாமாக்கிடுவோம் !
டாடி மம்மி என்றால் தண்டத்தொகை வாங்கிடுவோம் !
குழந்தைகளுக்கு பெயர்களை நல்ல தமிழில் சூட்டுவோம் !
குழந்தைகளுக்கு சிந்திக்க தமிழைப் பயிற்றுவிப்போம் !
ஊடகங்களின் தமிழ்க் கொலையைத் தடுத்திடுவோம் !
உரிமைகளைத் தமிழ் மொழிக்குப் பெற்றிடுவோம் !
விளம்பரங்களில் வேற்று மொழிக்கு தடை விதிப்போம் !
விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் அளிப்போம் !
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாக்கிடுவோம் !
எம் தமிழன் பெருமையை உணர்த்திடுவோம் !
உலக மொழிகளின் தாய்மொழி தமிழ் புரிய வைப்போம் !
உலக முதல்மொழி தமிழ் மூத்தது தமிழ் அறிய வைப்போம் !
தமிழின் அருமையை தமிழருக்குக் கற்பிப்போம் !
தமிழ் மொழி போல இனிது இல்லைஅறிவிப்போம் !
திருக்குறளை உடன் தேசிய நூலாக்க வேண்டும் !
தேசிய நூலாக்க தாமதிக்கும் சதியை முறியடிக்க வேண்டும் !
தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுவோம் !
தமிழ் கல்வி மட்டுமல்ல வாழ்வியல் அறிந்திடுவோம் !
வாழும் தமிழ் அறிஞர்களின் வாழ்நாளை நீட்டிப்போம் !
வாழும் காலமெல்லாம் போற்றிப் பாதுகாப்போம் !
படைப்பாளிகள் தமிங்கிலம் எழுதுவதை நிறுத்திடுவோம் !
படைப்பைக் கலப்பின்றி படைக்க வலியுறுத்துவோம் !
பிறமொழி இலக்கியங்களை தமிழாக்கம் செய்திடுவோம் !
பைந்தமிழ் இலக்கியங்களை பிறமொழியில் பெயர்த்திடுவோம் !
தமிழர் தமிழரோடு தமிழில் மட்டும் பேசிடுவோம் !
தமிழர்கள் அனைவரும் சாதி மதம் விடுத்து சங்கமிப்போம் !

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *