கதைகளின் காரணங்கள்.. 1 சூர்யா ரெங்கசாமி
கட்ட வெயில் , கால் சட்டையை கையோடு கழட்டி கொண்டே
காட்டுக்குள் ஓடி , ஓரமாய் பார்த்து ஒக்காரையிலே,
ஒண்டிய படி ஓலை பாம்பு போகும் ,
ஓலை பாம்பு ஒன்பது பாம்பாகுமென, பாதியிலே பயந்து ஓடி ,
கால் வழிய , கால் சட்டை வழிய -கம்மாயில் குதித்து , குளித்து எழுந்தால்-
குந்திக்கொண்ட்டே குடித்து கொண்டு இருந்தார்.
குளத்து தண்ணியை- ஒருவர்
”என்ன அய்யனே ,தண்ணி இனிக்குதா ?
முக்கனி ஈடாகுமடா முக்குலத்து தண்ணிக்கு! என்றார்
அய்யோ அந்த அழுக்கு ?
மீனும் பாசியும் ஆளுகிற குளத்துல அழுக்கு ஏது? அசுத்தம் ஏது? – என்றார்
அய்யோ அப்ப அந்த மீனு…
காட்டுக்குள் ஓடிய காரணம்- கண்ணுக்குள்
ஆயிரம் கதை சொல்லும்..
கதைகளின் காரணங்கள்.. 1
சூர்யா ரெங்கசாமி