கிரகங்களில் இளவரசன் புதன் பகவான்
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு நிறங்கள் ஏற்புடையதாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றது. அந்த வகையில் புதன் பகவானுக்கு உரிய நிறமாக இருப்பது பச்சை நிறம். புதன் பகவான் அறிவுக்கு உரிய கிரகமாக சொல்லப்பட்டுள்ளது.
1 புதன் தசை நடப்பவர்கள் அன்றாட உணவில் சிகப்பு மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது அதிர்ஷ்டத்தை தருமாம்.
2 திருஷ்டிக்காக கட்டப்படும் எலுமிச்சை பழத்துடன், பச்சை மிளகாயையும் சேர்த்து கட்டுவது துஷ்ட சக்திகளை துவம்சம் செய்ய சிறந்த பரிகாரம் ஆகும்.
புதன் காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்.
3 உடன் பிறந்த சகோதரிகளுக்கு அந்த வீட்டில் பிறந்த ஆண் பிள்ளைகள் வருடம் தோறும் பச்சை நிற புடவையை பரிசாக வழங்குவார்கள். திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும் இது போல் அவர்கள் தொடர்ந்து செய்து வருவார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தையும் இதன் மூலம் பெறுவார்கள் என்பது ஐதீகம். தன்னுடன் பிறந்த சகோதரிகளுக்கு பச்சை நிற புடவையை ஒவ்வொரு வருடமும் தானம் கொடுத்து வந்தால், பித்ரு தோஷமும் நீங்கி விடும் என்பது ஐதீகம். முன்னோர்களுடைய ஆசிர்வாதம் கிடைக்க இது போல் செய்வார்கள். புதனுக்குரிய பச்சை நிறத்தை கொடுப்பதால் தொழில் வளமும், குடும்ப வளமும் சிறப்பான முன்னேற்றத்தை பெறும்.
4 புதன் கிழமை தோறும் புதன் பகவான் வீற்றிருக்கும் கோவிலுக்கு சென்று பச்சை நிற தானியத்தை அல்லது பச்சை நிற தானியத்தால் செய்த நைவேத்தியத்தை பக்தர்களுக்குத் தானமாக கொடுப்பதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். பண தடை மற்றும் வருமான தடை இருப்பவர்கள் இது போல பரிகாரங்கள் செய்து பலன்களை பெறலாம்.