கவிதைகள்

உன்னுள் நீ .கவிஞர் இரா.இரவி.

உன்னுள் நீ .கவிஞர் இரா.இரவி.

உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்
உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ !

எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்
எனக்கு அன்னை தெரசா பிடிக்கும் !

ஆனால் அதற்கு முன்பாக என்னை
அளவின்றி எனக்குப் பிடிக்கும் !

நீ யாரையும் காதலிக்கலாம் ஆனால்
நீ முதலில் உன்னைக் காதலி !

உன் இதயத்தில் காதலி இருக்கட்டும்
உன்னை உன் இதயத்தில் முதலில் வை !

உன்னை நீ முதலில் நேசிக்க வேண்டும்
உனக்குப்பின் மற்றவரை நீ நேசிக்கலாம் !

உனக்கு இணை இவ்வுலகில் நீ மட்டுமே
உனக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை !

சாதிக்கப் பிறந்தவன் நீ மனதில் வை
சராசரி மனிதன் அல்ல நீ மனதில் வை !

உனக்கு இணை இவ்வுலகில் நீ மட்டுமே
உனக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை !

சாதிக்கப் பிறந்தவன் நீ மனதில் வை
சராசரி மனிதன் அல்ல நீ மனதில் வை !

உன்னை நீ மிக மிக உயர்வாக எண்ணு
உனக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது !

ஏன் பிறந்தோம் என்று எண்ணாதே
இனிதே பிறந்தோம் என்று எண்ணு !

என்னடா வாழ்க்கை இது வெறுக்காதே
என்னுடைய வாழ்க்கை என்று வாழ் !

இன்பம் வந்தால் ஆனந்தக் கூத்தாடாதே
துன்பம் வந்தால் சோர்ந்து போகாதே 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *