ஆரோக்கியம்வாழ்வியல்

மார்கழி மாதத்தில் அஜீரணம் – பாட்டி வைத்தியம்

1️⃣ உண்ட ஆகாரம் சில சமயம் ஜீரணம் ஆகாமல் இருக்கும். இதன் காரணமாக வயிற்றில் வலி உண்டாகும். வயிறு உப்பிசம் அடையும். புளித்த ஏப்பம் வரும். உண்ட ஆகாரம் கடுமையானதாக இருந்தால், இந்த கோளாறுகளுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும். இதைப்போக்க கீழ்கண்ட மருந்துகள் நன்கு பயன்படக் கூடியதாக இருக்கின்றன.

2️⃣ சம்பங்கி பூவில் ஐந்து எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரம் வரை ஊற்றிய பின் பூக்களை எடுத்து விட்டு அந்த நீரை மட்டும் குடிக்க வேண்டும். காலை, பகல், மாலையாக மூன்றே வேளை சாப்பிட்டால் போதும். அஜீரணம் மாறி ஆகாரம் செரிமானமாகி நல்ல பசி உண்டாகும். மார்கழி மாதத்தில்

3️⃣ நாயுருவி வேரை கொண்டு வந்து சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி, ஒரு கைப்பிடி அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து, ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதித்தபின் இறக்கி வடிகட்டி, காலை, மாலை, அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் அஜீரணம் மாறி ஜீரண சக்தி உண்டாகும். பசி எடுக்கும். மார்கழி மாதத்தில்

4️⃣ தேக்கரண்டியளவு சீரகம், அரை தேக்கரண்டி அளவு மிளகு, மொச்சைக்கொட்டை அளவு உப்பு இவைகளை அம்மியில் வைத்து மை போல அரைத்து, வாயில் போட்டு விழுங்க செய்து சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில்,  உண்ட ஆகாரம் செரித்து, புளியேப்பம் நின்று வயிற்று உப்பிசம் நீங்கி, நல்ல பசி எடுக்கும். மார்கழி மாதத்தில்

5️⃣ குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதே அளவு உப்பையும் அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறிக் கொண்டே இருந்தால், உப்பும் இலையும் கலந்து வெந்து சிவந்து கருகும். நன்றாக கருகி இலை தூளாகி விட்டபின் சட்டியை இறக்கி ஆற வைத்து, அம்மியில் வைத்து பட்டுப்போல தூள் பண்ணி ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். அஜீரணம் என்று தெரிந்தவுடன் காலை, மாலை அரை தேக்கரண்டி அளவு இதனை வாயில் போட்டு சிறிதளவு வெந்நீர் சாப்பிட்டு வந்தால் அஜீரண மாறி நல்ல பசி உண்டாகும். மார்கழி மாதத்தில்

6️⃣ ஒரு வெற்றிலையை சுத்தம் பார்த்து அதில் ஏழு மிளகையும் , சுண்டைக்காய் அளவு சீரகம் சேர்த்து மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கிய பின் சிறிதளவு வெந்நீர் குடித்தால் நல்ல பசி உண்டாகும். மார்கழி மாதத்தில்

மார்கழி மாதத்தில்

நன்றி...
அர்ஜுன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *