அம்மா ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
காணிக்கைக் கேட்காத
கண் கண்ட கடவுள்
அம்மா
நடமாடும்
தெய்வம்
அம்மா
கருவறை உள்ள
கடவுள்
அம்மா
உயிர் தந்த உயிர்
உயிர் வளர்த்த உயிர்
அம்மா
மனதில் அழியாத ஓவியம்
மறக்க முடியாத காவியம்
அம்மா
ஆடுகளும் மாடுகளும் கூட
உச்சரிக்கும் உயர்ந்த சொல்
அம்மா
வாய் பேசாத ஜீவன்களும்
பேசிடும் ஒரே சொல்
அம்மா
மகனின் வாழ்வு ஒளிர்ந்திட
உருகிடும் மெழுகு
அம்மா
உச்சங்களின் உச்சம்
உலகின் உச்சம்
அம்மா
அன்பின் சின்னம்
அமைதியின் திரு உருவம்
அம்மா
திசைக் காட்டும்
கலங்கரை விளக்கம்
அம்மா
கரை சேர்க்கும் தோணி
உயர்த்திடும் ஏணி
அம்மா
நேசம் பாசம் மிக்கவள்
வேசம் அறியாதவள்
அம்மா
அன்னையர் தினம் ! கவிஞர் இரா .இரவி !
அன்னையர் தினம் மட்டுமல்ல தினமும் !
அன்னையை நினைப்போம் போற்றுவோம் !
பத்து மாதங்கள் சுமந்துப் பெற்றவள் அன்னை !
பத்துப் போட்டு வளர்த்து எடுத்தவள் உன்னை !
‘அ ‘ வில் தொடங்கும் அற்புதம் அன்னை !
அம்மா அப்பா சொல்லி வளர்த்தாள் உன்னை !
உறவுகளிகளில் ஒப்பற்ற சிகரம் அன்னை !
உலகம் போற்றிட வளர்த்தாள் உன்னை !
உலகை அறிமுகம் செய்தவள் அன்னை !
உணர்வை ஊட்டி வளர்த்தாள் உன்னை !
வேதனை சோதனை ஏற்றாள் அன்னை !
வேண்டி விரும்பி பெற்றாள் உன்னை !
முப்பொழுதும் போற்றும் உறவு அன்னை !
எப்பொழுதும் உயிராய் காப்பாள் உன்னை !
மாதர் குலத்தின் மாணிக்கம் அன்னை !
மாண்பு மிக்க மனிதனாக்கினாள் உன்னை !
கருவறையில் சுமந்த கடவுள் அன்னை !
கருத்தாக வளர்த்து எடுத்தாள் உன்னை !
பாசத்தை மழையெனப் பொழிந்தாள் அன்னை !
பண்போடு வளர்த்து மகிழ்ந்தாள் உன்னை !
உயிர் தந்துப் பெற்றாள் அன்னை !
உயிராகப் போற்றி வளர்த்தாள் உன்னை !
மனைவி வந்ததும் மறக்காதே அன்னை !
மடியில் வைத்து வளர்த்தாள் உன்னை !
குழந்தை மறந்தாலும் மறக்காதவள் அன்னை !
குழந்தையை என்றுமே வெறுக்காதவள் அன்னை !
அகில உலகம் போற்றும் அன்னை !
அகல் விளக்காய் ஒளிர்ந்தாள் அன்னை !
தன்னலம் கருதாத உறவு அன்னை !
தன்குழந்தை நலம் கருதும் அன்னை !
அன்னையின்றி நீயுமில்லை நானுமில்லை !
அகிலம் இல்லை அன்பு இல்லை !
அன்னைக்கு இணையான உறவு உலகில் இல்லை
அன்னைக்கு இணை அன்னை மட்டுமே !
தாய் ! கவிஞர் இரா .இரவி !
தன்னலம் கருதாது சேய் நலம் கருதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் தாய்
தன்னை வருத்தி சேயை வளர்க்கும் இமயம்
தரணியில் நிகரற்ற புனித உறவு தாய்
தாய் நெடிலில் தொடங்கி மெய்யில்
முடியும் மெய்யான மெய் தாய்
எந்தத் தாயும் சேய்களை மறப்பதில்லை
இந்தச் சேய்களதான் தாயை மறக்கின்றனர்
உடலில் உயிர் உள்ளவரை என்றும்
ஒருபோதும் மறப்பதில்லை சேய்களைத் தாய்
மகன்கள்தான் மணமானதும் மறக்கின்றனர்
மகள்கள் மணமானாலும் மறப்பதில்லை
மனைவி வந்ததும் தாயை மதிப்பதில்லை
தாயோ மகனையே நினைத்து வாடுகின்றாள்
உறவுகள் ஓராயிரம் இருந்தாலும்
ஒப்பற்றத் தாயுக்கு ஈடு இணை எதுவுமில்லை
உலகில் யாரை மறந்தாலும் மகன்களே
உலகிற்கு வரக் காரணமான தாயை மறக்காதீர்கள்
அன்னை ! கவிஞர் இரா .இரவி
மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்
மாதாவைத்தான் முதன்மையாகச் சொன்னார்கள்
அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என்றார்கள்
அன்னையைத்தான் முதன்மையாகச் சொன்னார்கள்
தாய் நாடு என்றுதான் அன்றே சொன்னார்கள்
தந்தை நாடு என்று எங்கும் சொல்வதில்லை
தாய் மொழி என்றுதான் எங்கும் சொல்கிறார்கள்
தந்தை மொழி என்று எங்குமே சொல்வதில்லை
நூலைப் போல சேலை தாயைப்போல பிள்ளை
தாயால் சிறந்தோர் தரணியில் மிகுந்தோர்
மாமனிதர் அப்துல் கலாம் முதல்
மண்ணில் பிறப்போர் சிறக்க காரணம் அன்னை
அன்பை விதைக்கும் அன்புச் சின்னம் அன்னை
அகிலம் போற்றிடும் அற்புத உறவு அன்னை
அன்னை இன்றி யாரும்பிறப்பதில்லை உலகில்
அன்னைக்கு இணையான உறவு இல்லை உலகில்
தாயுக்குத் தலை வணங்கினால் உலகம்
தலை வணங்கும் உன்னிடம் !