ஆடிப் பெருக்கு! கவிஞர் மா.கணேஷ்
அகிலத்தில் அன்பு பெருகட்டும்…
ஆரோக்கியமான வாழ்வு பெருகட்டும்…
இனிய மனம் பெருகட்டும்…
ஈகை கொண்ட உள்ளம் பெருகட்டும்…
உலகெங்கும் விவசாயம் பெருகட்டும்…
ஊடல் இல்லா காதல் பெருகட்டும்…
எங்கும் வளமான வாழ்வு பெருகட்டும்…
ஏழ்மையில்லா சூழல் பெருகட்டும்…
ஐம்பொறியின் பலம் பெருகட்டும்…
ஒற்றுமையால் நலம் பெருகட்டும்…
ஓயாத உழைப்பால் உயர்வு பெருகட்டும்…
ஔவை வளர்த்த தமிழின் புகழ் எங்கும் பெருகட்டும்…
இஃது எல்லாம் இன்றே பெருகட்டும்…
🙏🏻அனைவருக்கும் எனது இனிய ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துகள்🙏🏻
நன்றி
கவிஞர் மா.கணேஷ்