ஐம்பூதங்களும் ஆஞ்சநேயரும் பக்தி பாடல் 🙏
ராமாயணம் பாடத் தொடங்கிய கம்பர் கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்கும் ஒரு பாடல் பாடியுள்ளார். அந்தப் பாடலில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களோடு ஆஞ்சநேயரைத் தொடர்புபடுத்தி உள்ளார்.
“அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான்”
இதன் பொருள்:
ஐம்பூதங்களுள் ஒன்றாகிய காற்றுக்கு மைந்தனாகிய அனுமன்,
ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நீர்ப்பரப்பாகிய கடலைத்தாண்டி,
ஐம்பூதங்களுள் ஒன்றாகிய ஆகாயத்தையே வழியாக் கொண்டு இலங்கையை அடைந்து,
ஐம்பூதங்களுகள் ஒன்றாகிய நிலமகள் பெற்றெடுத்த சீதையைக் கண்டு,
அயலார் ஊரில் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயை வைத்தான்.
எனவே ஆஞ்சநேயரை வணங்கினால் ஐம்பூதங்களையும் வணங்கியதற்குச் சமம். எனவே ஐம்பூதங்களின் சக்தியை நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
“ஸ்ரீ ராம் ஜெய் ராம்”
நன்றி….