ஆஞ்சநேயருக்கு விரதம் இருப்பது எப்படி !
அனுமன் ஜெயந்தி அன்று நாம் விரதம் இருந்தால் சகல செல்வங்களும் நமக்கு கிடைக்கும். நினைத்த காரியத்தில் வெற்றி பெறும். துன்பம் விலகும். இன்பம் கிட்டும்.
அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு உணவு அருந்தாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஆஞ்சநேயரை ஸ்ரீராம நாமத்தால் வழிபடுவதோடு வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். அனுமன் வாலில் பொட்டு வைக்க வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசியன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து ” ஓம் நமோ பகவதேவ வாயு நந்தனாய்” என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.
ஓம் ஹம் ஹனுமதே நம.. என்ற மந்திரத்தை சொல்லி அனுமனின் தலையில் துளசிகளும், வாசனை மலர்களும் வைத்தால் கஷ்டங்கள் யாவும் பறந்து போகும். அனுமனின் ஆர்த்தியின் போது 5,11,50,108 நெய் நிரப்பிய சிவப்பு திரியை பயன்படுத்த வேண்டும்..
கோதுமையில் செய்த ரொட்டியை பொடி செய்து தயாரிக்கப்பட்ட பலகாரம், வாழைப்பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.
நன்றி....