அன்பும் வம்பும் | அன்பு பெருகட்டும் மோதல் குறையட்டும் !!
“அன்பு முதற்கொண்டு நற்பண்பினை பாரினில் விற்றல் நன்று”
அன்புதான் முதலாமிடம் – அந்த
அன்பினை மூலதனமாகக் கொண்டு உலகத்தில் எல்லோருக்கும்
பயன் தரக்கூடிய நல்ல
பண்புகளை அன்றாடம் விநியோகம் செய்தால் உலகம் சிறக்கும் – என்பதனை புதிய குறள் விளக்குகின்றது.
ஆம்
ஆதியும் அன்புதான்
அந்தமும் அன்புதான்
அன்பு ஈனும் ஆர்வலர்கள்
யார் யார் ?
அன்பிலார் எல்லாம்
யார் யார் ? – இதனை
திரும்பத் திரும்ப
சொல்லித்தான் தீரவேண்டுமா ?
அன்புக்குக்
காதல் தெரியுமா என்றும்
கேட்டிடல் வேண்டாம்
அன்புதான் காதல்
காதல்தான் அன்பு – பலர்
அன்பினை அன்பாய் சுவாசிக்கிறார்கள் சிலர் அன்பினை வந்து வம்புக்கிழுத்து வக்கிரம் புரிகின்றார்கள்
வக்கிரபுத்தி நடக்கிறது அவனுக்கு அதனால்தான் இப்படி ……
சாயம் பூசும் மாய மனிதர்களும் உண்டு !
அன்பு ஒன்று
இல்லாமற் போனதாலே
என்னென்ன அக்கிரமங்கள்
என்னென்ன அநியாயங்கள்
தலைவிரித்துத் தாண்டவம்
ஆடிக் கொண்டிருக்கின்றன !
நன்றி….
காரை வீரையா