அன்பு கவசம் ஏந்து
(தீவிரவாதிகளின் பிடியில் இருந்து இந்த தேசத்தைக் காப்பதற்கு இளைஞனே நீ வருவாயா? என்று கெஞ்சிக் கேட்கும் உணர்ச்சிமிக்க பாடல் இது)
அரும்புதே ஆசை – உன்னை
விரும்புதே இந்த தேசம்
அன்பு மழையினில் நீ நினைவாயா?
அல்லும் பகலும் தேசம் காக்க வருவாயா?
(அரும்புதே)
நீருக்குள் நெருப்பு அது
பூமிக்குமேலே புதுப்புது யுத்தம்
புறப்பட்ட இடமெல்லாம் வெடிக்கும் சத்தம்
வாதம் என்னும் தீவிரவாத நோயைக்
கொண்டு வந்தான் பாவி மனிதன் இங்கே
குண்டுமாரி பொழிந்தாலும் உன் மனசு
துண்டு துண்டாகப் போகக்கூடாது தம்பி.
நெஞ்சு பொறுக்குதில்லை நிலை கெட்ட
மாந்தரை யெண்ணி யெண்ணி – நீ
அஞ்சினால் உன் தலையில் மிளகாய்
அரைப்பான் அந்தப் படுபாவி
அன்பு கவசம் ஏந்திப் புனிதப் போருக்கு புறப்பட்டு தம்பி
அவனியை காக்க அல்லும் பகலும் விழித்திடு தம்பி.
கவிஞர்
காரை வீரையா