அசானி புயல் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலு குறையும் – இந்திய வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து நேற்று காலை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு அசானி (Cyclone Asani) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமாகி மேற்கு, வடமேற்கு திசையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
அசானி புயல் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (மே 09) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.