உடல் சூடு தணிய | பாட்டி வைத்தியம் 🌞
ஒருசிலருக்கு உடலில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல இருக்கும் இதை போக்கக் கீழ்க்கண்ட மருந்துகள் நன்கு பயன்படும்.
1️⃣ ஒரு கைப்பிடி அளவு முருங்கைப் பூவை சுத்தம் செய்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு தேக்கரண்டி அளவு பசுவின் நெய்யை விட்டு சட்டியை அடுப்பில் வைத்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளையில் மட்டும் குடித்து வந்தால் ஏழே நாட்களில் உடல் சூடு தணிந்து சம அளவிற்கு வரும்.
2️⃣ நெருஞ்சில் செடியைக் கொண்டு வந்து, நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு கை பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு, அதே அளவு அருகன் புல்லையும் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமநிலைக்கு வரும்.
3️⃣ அமுக்கினால் கிழங்கை வாங்கி வந்து 5 கிராம் எடுத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் அளவு வீதம் மூன்று நாட்கள் ஆறு வேளை சாப்பிட்டால் போதும், உடல் சூடு தணிந்து சமநிலைக்கு வரும்.
4️⃣ தேவையான அளவு பொன்னாங்கண்ணிக் கீரையை கொண்டு வந்து, ஆய்ந்து பெரிய வெங்காயம் ஒன்றை பொடியாக நறுக்கி அத்துடன் சேர்த்து பொரியல் செய்து, பகல் உணவில் சேர்த்து தேக்கரண்டி அளவு பசு வெண்ணெய் சேர்த்து மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து சமநிலைக்கு வரும்.
5️⃣ புளிச்சக் கீரையை கொண்டுவந்து அதை ஆராய்ந்து புளி விடாமல் கடைந்து தினசரி பகல் உணவுடன் சேர்த்து, தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். சமநிலைக்கு வரும்.
6️⃣ வில்வ இலையைக் கொண்டு வந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து 30 கிராம் வெங்காயத்தை உரித்து அம்மியில் வைத்து நைத்து அதில் போட வேண்டும். தேக்கரண்டியளவு மிளகு, அதே அளவு வெந்தயம் இவைகளையும் நைத்து போட வேண்டும், பிறகு மூடி நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும், காலை மாலை அரை டம்ளர் வீதம் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். மருந்து சாப்பிடும் மூன்று நாட்களுக்கும் புளி சேர்க்கக்கூடாது.
7️⃣ கானாம் வாழை இலையைக் கொண்டு வந்து சுத்தமாக ஆய்ந்து எடுத்து, அந்த கீரை இருக்கும் அளவில் பாதியளவு துவரம்பருப்பை சேர்த்து வேக வைத்து, உப்பு காரம் தேங்காய் சேர்த்து சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஏழே நாட்களில் உடல் சூடு தணியும். தேவையானால் ஒரு தேக்கரண்டி அளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றி