மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு | காரை வீரையா கனிவுடன்
கொரோனா தற்போது கிராமப் புறங்களிலும் பரவி வருகின்றது. கிராமப்புற மக்கள் எவ்வித பயமும் இல்லாமல் அவரவர் வேலைகளை பார்த்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கம் இவர்களின் மனதில் முழுமையாக பதியவில்லை. கொரோனா வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிச்சலுடன் இருக்கிறார்கள்.
இந்த நிலையைப் போக்க கிராமப்புற மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் முன்தடுப்பு பணிகள் உடனடியாக மேற்கொண்டால் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்திவிடலாம்.
கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்காக :
1️⃣ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்/ பெண் ஒருவரை அந்தந்த பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் மூலமாக நியமனம் செய்ய அனுமதிக்கலாம்.
2️⃣ சமூகநலப் பணியில் மிகுந்த அக்கறை உடையவர்களாக பார்த்து பணிக்கு அமர்த்த வேண்டும்.
3️⃣ “கொரோனா விழிப்புணர்வு பணியாளர்” என்ற பெயரில் பணியின் பெயராக இருக்க வேண்டும்.
4️⃣ கொரோனா முழுமையாக தடுக்கப்படும் காலம் வரை இப்பணி பணியாளர்களுக்கு கௌரவ ஊதியமாக மாதம் 1க்கு ரூ 2000/- வழங்கப்படவேண்டும்.
5️⃣ இத்தொகை ஊராட்சியின் மூலமாக வழங்கப்பட்டு விட்டு பின்னர் அரசு நிதி பெற வேண்டும்.
கொரோனா பணியாளர்களுக்கான பணிகள் :
1️⃣ கொரோனா தடுப்பு பணியாளர்கள் கையுறை மறறும் முககவசத்துடன் பணிக்கு வர வேண்டும்.
2️⃣ கிராமப்புற குடும்பங்கள் சார்ந்த விவரப்பட்டியலை VAO மூலமாக பெற்றுக்கொள்ளவேண்டும்.
3️⃣ குடும்பத்திலுள்ள எண்ணிக்கைப் பொறுத்து அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்வோர் மற்றும் 100 நாள் வேலைக்கு செல்வோர் மற்றும் இதர தொழில் சார்ந்து செயல்படுபவர்களுக்கு விலையில்லா முககவசம் வழங்க வேண்டும்.
4️⃣ கொரோனா விழிப்புணர்வு சார்ந்த வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒவ்வொரு வீட்டின் வாசற்படி முகப்பு சுவரில் ஒட்டவேண்டும்.
5️⃣ முகக்கவசம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியின்போது அந்த குடும்பத்தில் உள்ள முதியோர் மற்றும் சிறுவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால் உடனே தெரியப்படுத்த வேண்டும் என்றும் கனிவாக கூறவேண்டும்.
6️⃣ வாரம் ஒருமுறை ஊராட்சி முழுவதும் மைக்செட் மூலமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
7️⃣ கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடு பகுதிகளில் வாரம் இருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
8️⃣ முகக்கவசம் வழங்கிய ஸ்டிக்கர் ஒட்டிய மற்றும் விழிப்புணர்வு சார்ந்த பணிகளின் அன்றாட முன்னேற்ற அறிக்கையின் விவரங்களை அந்தந்த பகுதி ஊராட்சி செயலர் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு உரிய படிவத்தில் அனுப்பி வைக்க வேண்டும்.
ஐடியா வீரையா
சமூக நலஆர்வலர் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்,
காரையூர்.
புதுகோட்டை மாவட்டம்.
அருமையான பதிவு