தினம் ஒரு கோபுர தரிசனம்
மணிகண்டீசம் மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்
இறைவர் திருப்பெயர்: மணிகண்டீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்: பிரம்மன், திருமால், அனைத்து தேவர்கள்.
தல வரலாறு
இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
திருப்பாற்கடலை கடைந்தபோது தோன்றிய விஷத்தால் துயருற்று, தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அவ்விஷத்தை இறைவனுக்கு கொடுத்துண்ணுமாறு செய்த பாவம் நீங்குமாறு திருமால், பிரமன் முதலியோர் காஞ்சிக்கு வந்து தங்களைக் காத்த இறைவனின் மணிகண்டத்திற்கு (கண்டம் – கழுத்து) போற்றி செய்யும் வகையில் “மணிகண்டம்” என்ற பெயரிலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களின் பாவத்தைப் போக்கிக் கொண்டனர் என்பது தல வரலாறாகும். எனவே இத்தலம் மணிகண்டீசம் என்றும், சுவாமி – மணிகண்டீசுவரர் என்றும் திருநாமம் பெற்று விளங்குகிறது. பழைய நூல் ஒன்று இக்கோயிலில் விஷகண்டீசுவரர் சந்நிதி இருந்ததாக தெரிவிக்கிறது
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் – சின்னகாஞ்சிபுரத்தில் கூட்டுறவு அர்பன் வங்கிக்கு எதிர்ப்புறத்தில் இக்கோயில் உள்ளது