பேக்கிங் இல்லாத இனிப்புகளுக்கும் காலாவதி தேதி கட்டாயம்..!!
அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து கடைகளில் இனிப்புப் பண்டங்களை சில்லரை விற்பனை செய்யும் போது காலாவதியாகும் தேதியைக் குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் உற்பத்தி தேதி அவசியமில்லை என்று உணவு தரக் கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI தெரிவித்துள்ளது.
பொட்டலமாக விற்கப்படும் உணவுப் பொருட்கள் மீது இந்த தேதிக்குள் பயன்படுத்துவது சிறப்பானது என்ற தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
விழாக் காலங்களில் இனிப்பு வகைகள் தேதி காலவாதியான பின்னரும் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து பேக்கிங் செய்யப்படாத இனிப்புகளுக்கும் காலாவதி தேதி அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி. tamilexpressnees.com