கவிதைகள்வாழ்வியல்

தந்தை ! கவிஞர் இரா .இரவி !

உறவுகளில் உன்னதமானவர் !
உறவுகளுக்காக உழைப்பவர் !
உறக்கம் குறைப்பவர் !
உணர்வில் குன்றானவர் !
பாசத்தில் இமயமானவர் !
பண்பில் சிறந்தவர் !
தன்னலம் மறப்பவர்
தன்குடும்ப நலம் காப்பவர் !
ஓடாய் உழைத்துத் தேய்பவர் !
ஒருபோதும் வருதாதவர் !
சேயுக்கு சிகரம் தருபவர் !
சிந்தையைச் செதுக்குபவர் !
உயர்ந்திட ஏணியானவர் !
உருகிடும் மெழுகானவர் !
ஒளிர்ந்திட எண்ணையானவர் !
ஒழுக்கம் கற்பித்தவர் !
முன்மாதிரியாக வாழ்பவர் !
முகம் என்றும் வாடதவர் !
கடமையை கண்ணாக மதிப்பவர்
மடமையை மனதில் நீக்குபவர் !
உலகத்தை பற்றி உணர்த்துபவர் !
ஒய்வை என்றும் அறியாதவர் !
பாதை போட்டுத் தருபவர் !
பண்பை பயிற்றுவிப்பவர் !
பயம் நீங்கிடச் செய்பவர் !
பாசம் ஊட்டி வளர்ப்பவர் !
குழந்தைகள் மணக்க சந்தனமானவர் !
கூடி இருப்போர் போற்ற வைத்தவர் !
தாய் ஒரு விழி என்றால் !
தந்தை மறுவிழி என்பேன் ! 
இலை ! கவிஞர் இரா .இரவி !
மரத்தில் இருக்கும்வரை
மரணம் இல்லை !
மரம் விட்டு உதிர்ந்ததும்
மரணம் தொடங்கும் !
உதிர்வதுண்டு தானாகவும்
உதிர்ப்பதுண்டு காற்றும் !
நிலத்திலும் விழுவதுண்டு
நீரிலும் விழுவதுண்டு !
நெருப்பிலும் விழுவதுண்டு
நெஞ்சம் கனப்பதுண்டு !
சிலர் பறித்தும் பிரிவதுண்டு
சிந்திக்காமலும் பிரிவதுண்டு !
ஆணவத்திலும் பிரிவதுண்டு
அன்பின்றிப் பிரிவதுண்டு !
இலை என்ற பெயரும்
இனி சருகு என்றாகும் !
உருக்குலைந்து போகும்
உரமாகவும் மக்கும் !
பெற்றோருடன் வாழும் வாழ்க்கை
பாதுகாப்பானது என்றும் !
பிரிய நேர்ந்தாலும்
பாசம் காட்டி வாழுங்கள் !
மரம் இன்றி இலை இல்லை
பெற்றோர் இன்றி பிள்ளை இல்லை !

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *