கவிதைகள்வாழ்வியல்

விண்ணைத் தாண்டலாம்!


விடியலை தந்திடும் கதிரவனாய்
கண்களில் ஔிகொண்டு செயல்படு
விண்ணை தாண்டலாம்..!

வீசி எறியும் வித்து விருட்சமாவது போல்
வீறு கொண்டு எழுந்திடு
விண்ணை தாண்டலாம்..!

முயற்சியொன்றையே மூச்சுக்காற்றாய்
சுவாசிக்க பழகிடு
விண்ணை தாண்டலாம்..!

சிறகடித்து பறந்திடும் சிட்டுக்களாய்
மனஉறுதி கொண்டு பறந்திடு
விண்ணை தாண்டலாம்..!

உழைப்பின் உன்னதத்தை உணர்ந்து
உழைப்பே உயர்வென கொண்டிடு
விண்ணை தாண்டலாம்..!

விளைச்சலை தந்திடும் விளைநிலமென
மனதில் முயற்சி விதைகளை விதைத்திடு
விண்ணை தாண்டலாம்..!

மனக்கவலைக்கு மறதியே மருந்தென
மனஎழுச்சி கொண்டு செயல்படு
விண்ணை தாண்டலாம்..!

சோதனையை கண்டு சோர்ந்துவிடாது
சாதனையை சவாலாய் கொண்டிடு
விண்ணை தாண்டலாம்..!

முயற்சியையும் பயிற்சியையும்
இருகண்கள்யென கொண்டிடு
விண்ணை தாண்டலாம்..!

ஓய்வு அறியா சூரியனாய்
ஓய்வின்றி உழைத்திடு
விண்ணை தாண்டலாம்..!

நன்றி 
கவிஞர் மா.கணேஷ்

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *