மர்மம் விலகாத கோவில்கள் ? சோமநாதர் கோயில் ( குஜராத் ) Part-1 Gujarat Shree Stambeshwar Mahadev Temple
சோமநாதபுரம் சிவன் கோயில்
பெயர்: சோமநாதபுரம் சிவன் கோயில்
அமைவிடம்
ஊர்: பிரபாச பட்டினம்
மாவட்டம்: கிர் சோம்நாத் மாவட்டம்
மாநிலம்: குஜராத்
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: சிவபெருமான்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: சாளுக்கியர்

புராணக் கதைகள்
இந்துக்களின் தொன்மையான புராணமான ஸ்கந்த புராணத்தில் ஜோதிர்லிங்க திருத்தலமான சோமநாதர் சிவபெருமான் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரன் தனது 27 மனைவியரில் உரோகிணியுடம் மட்டும் அளவு கடந்த அன்பு பாராட்டி மற்ற மனைவியர்களைப் புறக்கணித்தான். தனது 26 மகள்களின் துயரத்தைக் கண்டு சீற்றங்கொண்ட தந்தை தட்சப்பிரசாபதி, சந்திரனுக்கு தொழு நோயால் தேய்ந்து போகக் கடவது என்று சாபமிட்டார். ஒவ்வொரு நாளும் தேய்ந்து வந்த சந்திரன் இறுதியில் சௌராட்டிரத்தின் கடற்கரையில் உள்ள பிரபாச தீர்தத்தில், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை சரணடைந்து நோய் நீங்கி சுகமடைந்தான். அதன்படி சந்திரன் தேய்ந்து தேய்ந்து வளரும் நிலை ஏற்பட்டது.
ஸ்கந்த புராணத்தில் ப்ரபாச காண்டம் சோமநாதர் திருக்கோயிலின் சிவலிங்கம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் பூமிக்கடியில் அமைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.மகாபாரதத்திலும் சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டவரலாறு கூறப்படுகின்றது
ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதார முடிவின் போது இங்குள்ள பிரபாச பட்டினத்திற்கு தங்கியிருந்த காலத்தில், வேடுவனின் கனையால் காலில் தாக்கப்பட்டு இறந்தார் என பாகவத புராணம் கூறுகிறது.

சந்தனக் கதவுகள்
கஜினி முகமதுவால் ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்ட சோமநாதர் கோயிலின் சந்தனக் கதவுகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர 1842 ஆம் ஆண்டில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் லார்டு எல்லன்பரோ (Lord Ellenborough) முயன்றார். இதனால் ஆங்கிலேயரின் பலவிதமான கண்டனங்களும் தமது தாய்நாட்டின் மதத்திற்கு துரோகம் செய்வதாகவும், சிவலிங்க வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.
கோயிலின் கட்டிடக் கலை அம்சங்கள்
சாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் இறுதியாக கட்டப்பட்ட சோமநாதர் கோயில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது.

மர்மம் விலகாத கோவில்
சோமநாதர் கோவில் சோமநாதர் கோவிலைப் பற்றிய ஆச்சரியங்கள் உலகம் முழுவதும் தெரிந்திருந்தது. அதன் காரணமாகவே 17ஆவது முறை கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது அவன் குறிவைத்தது புகழ்பெற்ற சோமநாதர் ஆலயத்தை தான்.
அன்றைய காலத்தில் இந்தியாவில் இருந்த கோவில்களில் மிகவும் பணக்கார கோவில் அது தான். ஒரே வரியில் சொல்வதென்றால், அவன் சோமநாதர் கோவிலில் இருந்து கொள்ளையடித்த தங்கத்தின் எடை மட்டும் 6 டன்னுக்கும் அதிகம். அதோடு, அந்த கோவிலில் இருந்த செல்வ வளத்தை தாண்டி இரண்டு ஆச்சரிய அதிசயங்கள் இருந்தன.
சோமநாதர் கோவில் கடற்கரையை ஒட்டிய கோவில் என்பதால், தினசரி காலையும் மாலையும் ஒரு பெரிய கடல் அலை ஒன்று எழும்பி சோமநாதர் கோவில் படிக்கட்டுகளை முத்தமிட்டு திரும்பும் என்பது தான். இன்றைய கட்டடக்கலை வல்லுநர்களுக்கு இது புரியாத புதிர் தான். மற்றொரு ஆச்சரியம் அந்த கோவிலில் கருவறை லிங்கம் தான். மற்ற கோவில்களில் இல்லாத அதிசயம் சோமநாதர் கோவில் லிங்கத்திற்கு இருந்தது. அந்த கோவில் கருவறை லிங்கம் மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் தரையில் அமைந்திருக்கவில்லை.
ஆதி காலம் முதலே சிவ வழிபாடு என்பது நமது நாட்டில் இருந்து வருகிறது. அதற்கான சான்றுகளும் நம்மிடம் பல உண்டு. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோயிலிற்கு அருகில் உள்ள கடற் பகுதியில் சிவ லிங்கல்கள் பல தானாக தோன்றியுள்ள.
Pingback: மர்மம் விலகாத கோவில்கள் ? Part-2 தஞ்சை பெரிய கோவில் ( Tanjore Peruvadiyar Temple ) - Tamil Deepam