ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி!
சுட்டபோதும் சுவை தந்தது சோளக்கதிர் !
புறம் முள்ளாக அகம் இனிக்கும் சுளையாக பலா!
அருகே முள் ஆனாலும் மகிழ்ச்சி ரோசா !
வேறு இல்லை இணையான மலர் செம்பருத்தி !
உருவமின்றியே அசைத்தன கிளைகளை காற்று !
இல்லை தண்ணீர் உண்டு வரலாறு பழைய கிணறு !
தெரிந்தது குளத்தில் நகரும் மேகம் !
துளிர்த்தது பட்ட மரம் நல்ல மழை !
வெடித்தது பஞ்சு வருத்தத்தில் இலவு காத்த கிளி !
பணிவே சிறப்பு வளைந்து நின்றது விளைந்த கதிர் !
நன்றி !
கவிஞர் இரா. இரவி