இயற்கையான முறையில் தலைமுடி பராமரிப்பு 🌺
1️⃣ வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும்.
2️⃣ தேவையான அளவு மருதாணி இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, நன்கு அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி மிருதுவாக இருக்கும். உடல் சூடும் குறையும்.
3️⃣ நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இள நரை கருமை நிறத்திற்கு மாறும். முடியும் செழுமை பெறும்.
4️⃣ முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வர, நரை நீங்கும். முளைக்கீரையை நன்கு உலர்த்திப் பொடி செய்து தினசரி அரை ஸ்பூன் சாப்பிட்டும் வரலாம். நரை விலகும்.
5️⃣ செம்பருத்திப் பூக்களைப் பறித்து , காம்பை நீக்கி சுத்தம் செய்து. அதை தேவையான தேங்காய் எண்ணெயில் கசக்கிப் போட்டு, சடசடப்பு நின்றதும் இறக்கி வைத்து, ஆறிய பின் பாட்டிலில் உற்றி வைத்துக்கொண்டு. தினமும் தடவி வந்தாலும் முடி செழித்து வளரும். முடி உதிர்வதும் நின்றுபோகும்.
6️⃣ மருதாணி இலை, கற்றாழைச்சாறு,
கறிவேப்பிலையை, எலுமிச்சம் சாறு, இவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலைமுடியில் தேய்த்துவந்தால் முடி கருப்பாக நன்றாக வளரும்.
7️⃣ இரவில் தூங்கும் பொழுது செம்பருத்தி இலையை முடியில் வைத்துக்கொண்டு தூங்கினால் பேன், பொடுகு வராது.
8️⃣ தலையில் பொடுகு உள்ள இடத்தில் கற்றாலையை நன்றாக தேய்த்து மசாஜ் செய்யும்போது பொடுகு படிப்படியாக குறையும்.
நன்றி….