கடவுள் தரிசனம் கிடைக்காதா?..
கடவுளின் தரிசனம் வேண்டி பல காலம் தவம் இருந்தான் ஒரு மன்னன். தவத்தின் மனம் குளிர்ந்த கடவுள் அவன் முன்னால் தோன்றி னார். பெருமகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்.
இப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ அதேபோல மகாராணி, அரச குடும்பத்தினர், மந்திரி மற்றும் என் நாட்டு மக்கள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும் என்று கேட்டான்.
கடவுளை தரிசிப்பது என்பது அவரவர் கர்ம வினையை பொருத்தே அமையும் என்றாலும், மன்னன் வரத்தைக் கேட்டு விட்டதால் கடவுளும் சம்மதித்தார். எனவே கடவுள் தூரத்தில் இருக்கும் மலையைக் காட்டி அந்த மலையின் உச்சிக்கு அனைவரையும் அழைத்துக்கொண்டு வா நான் காட்சி தருகிறேன் என்று சொல்லி விட்டு மறைந்தார்.
மன்னன் பரவசமாகி நாடு முழுக்க தண்டோரா போட்டு விஷயத்தை சொன்னார். அனைவரும் கடவுளை காணும் ஆவலில் திரண்டு வந்து மலை ஏறத் தொடங்கினார்.
சிறிது தூரம் சென்றவுடன் ஓரிடத்தில் செப்புக் காசுகள் குவிந்து கிடந்தன, நாட்டு மக்களில் சிலர் அங்கே ஓடி அவற்றை எடுக்க ஆரம்பித்தனர். மன்னன் எரிச்சல் ஆகி, அனைவருக்கும் கடவுள் காட்சி கிடைக்கப்போகிறது இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை கீழே போட்டுவிட்டு அனைவரும் வாருங்கள் என்று உரக்கச் சொன்னார். அதற்கு மக்கள் போங்கள் மன்னா! காசுதான் முக்கியம் கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது என்று அலட்சியமாக கேட்டு விட்டு அவர்கள் காசுகளை எடுக்க தொடர்ந்தனர்.
எப்படியோ போங்க என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தான் மன்னன். இன்னும் கொஞ்ச தூரம் போனதும் பெரிய காசுகளும் வெள்ளிப் பெட்டியில் நிறைய சிதறிக்கிடந்தன. மக்கள் கடவுளை மறந்து விட்டு அவற்றை மூட்டை கட்ட தொடங்கினர், விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்கப்போகிறது அதைவிட இந்த வெள்ளிக்கட்டிகள் முக்கியமா என்று கத்திய மன்னனை அலட்சியம் செய்துவிட்டு திரும்பவும் வெள்ளிக் காசுகளை அல்ல தொடங்கினர் மக்கள்.
சரி உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன் பயணத்தை தொடர்ந்தான் இப்போது மகாராணியும் ராஜ குடும்பத்தினரும் மந்திரி பிரதானிகளும் மட்டுமே கூட வந்தனர். சிறிது தூரம் சென்றவுடன் ஓரிடத்தில் தங்க புதையல் குவிந்து கிடந்தது, அதை பார்த்தவுடன் அரச குடும்பத்தினர் எதையும் பொருட்படுத்தாமல் அங்கு சென்றுவிட்டனர். இப்போது மீதி இருந்தது மகாராணியும் மன்னரும் மட்டுமே.
இன்னும் சிறிது தூரம் சென்றவுடன் அவைர குவியலை பார்த்த மகாராணி மன்னரையும் மறந்து அங்கு சென்று விட்டார். இப்போது மன்னர் மட்டுமே மலை உச்சிக்கு சென்றடைந்தார்.
அங்கு கடவுள் மன்னர் முன்பாக தோன்றி “எங்கே உங்கள் மக்கள்.. !” என்று கேட்டு சிரித்தார்.. மன்னன் தலை குனிந்தான்.
நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்று சிலரே அறிவார்கள். அவர்களே என்னை தரிசிக்க முடியும். உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக் கொண்டவர்கள், இப்படித்தான் வழிதவறி போவார்கள். “இவற்றையெல்லாம் கடந்து இசையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர்” என்று சொல்லி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்.