வேகம்! சிறுகதை மா.கணேஷ்.
சார் இங்க யாருங்க கிருஷ்ணன். நான் தான் சிஸ்டர் வாங்க சார் உங்களை டாக்டர் மேடம் கூப்பிடுறாங்க. வணக்கம் டாக்டர் சார் வாழ்த்துகள் நீங்க அப்பா ஆக போகிறிங்க மிகவும் மகிழ்ச்சிங்கம்மா. அதெல்லாம் இருக்கட்டும் திருமணம்மாகி நீண்ட நாள் கழித்து இப்ப தான் அவங்க அம்மாவாக போறாங்க. இனியாவது இருவரும் வேலை வேலையினு வேகம் எடுத்து ஓடாதிங்க குழந்தையை கவனிங்க சரிங்க மேடம்.
நாட்கள் ஓடியது அழகிய ஆண் குழந்தை பிறந்தது. சுந்தர் என்று பெயர் வைத்து செல்லம்மாக வளர்த்தனர். கண்மணி அம்மா குழந்தையுடன் வீட்டில் இருந்தார் வேலைக்கு செல்லாமல். துணைக்கு சுமதி என்ற பெண்மணியை பணியமர்த்தி இவர்களை கவனித்துக்கொள்ள கிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்து விட்டு தான் பணிக்கு புறப்பட்டார்.
நாட்கள் கடந்தது இந்தம்மா கண்மணி உனக்கு இன்றோடு விடுமுறை முடிந்தது . நாளையில் இருந்து நீ பணிக்கு செல்ல வேண்டும் சரிங்க.
குழந்தை சுந்தர் வீட்டு பணியாள் சுமதியின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தான். பள்ளி பருவங்கள் வந்தனெ அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தான்.
ஆறாம் வகுப்பு தொடர நீண்ட தொலைவில் உள்ள பள்ளியில் சேர்த்தனர். அங்கு விடுதியில் தங்கி பனிரெண்டாம் வகுப்பு வரை தொடர்ந்தான். இதற்கிடையே விடுமுறை நாட்களில் மட்டும் வீட்டுக்கு வருவான். அதுவும் வந்த அடுத்த நாளே சிறப்பு வகுப்பு என்று போன் வந்ததும் கிளம்பி விடுவான். எந்த சூழலிலும் பெற்றோரின் அன்பை பெற அவனால் இயலவில்லை.
பனிரெண்டாம் வகுப்பு முடித்ததும் மருத்துவம் படிக்க சொல்லி பெற்றோர் சொல்லவே. ஆனால் தனக்கு பொறியியல் படிக்கவே விருப்பம் என்று கூறவே. அடுத்த மேற்படிப்பு படிக்க வீட்டில் ஒரு போரட்டம்மே நிகழ்ந்தது. இறுதியாக ஒருவழியாக தன் விருப்பத்தினை பெற்றோரை ஏற்கசெய்தான்.
மீண்டும் மறுபடியும் பெற்றோரை பிரிந்து நீண்ட தொலைவில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்த்தான். இந்த முறை சுந்தர் நான் விடுதியில் தங்க மாட்டேன் என்றும் இருவரும் பணிமாறுதல் பெற்று தன்னுடன் வரவேண்டும் என்றான்.
இதுநாள் வரை மகனை பிரிந்து இருந்து அவனுக்காக பொன் – பொருள் சேர்த்தது போதும் வாங்க சுந்தருடன் செல்வோம் என கண்மணியம்மா கூறியதும். சரிம்மா நான் பணிமாறுதலுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று அங்கிருந்து புறப்பட்டார் கிருஷ்ணன்.
தன் பிள்ளையுடன் அதே ஊரில் மீண்டும் பணியில் சேர்ந்தனர். மீண்டும் நாட்கள் ஓடியது. ஒருநாள்சுந்தர் தன் அம்மாவிடம் வந்து தனக்கு புது மாடல் பைக் வேண்டும் என்றான். சரி உங்க அப்பா வந்ததும் சொல்லுறேன். அம்மான்னா அம்மா தான் சரி சரி வா சாப்பிட.
என்னங்க சொல்லும்மா கண்மணி நம்ம பையனுக்கு பைக் வேணும்மாம். அவனுக்கு இப்ப எதுக்கு பைக்காம் அது தான் காலேஜ்ல கொண்டு போய் கார்ல விடுறேன்ல அப்பறம் என்னாவம். இல்லிங்க அவன் கூட படிக்கிற பசங்க எல்லாம் பைக்குல தான் வாரனுங்களாம் அதுதான். சரி பார்க்கலாம் நீ இப்ப சாப்பாடு போடு எனக்கு ரொம்ப பசிக்குது.
அப்பா என்னடா அந்த பைக் என்னாச்சு சரி வாங்கி தாறேன். உன் பிறந்த நாள் பரிசாக ம்ம் மிகவும் நன்றிப்பா….
பிறந்த நாள் அன்று தன் தந்தையுடன் புது மாடல் பைக்கில் வந்து இறங்கினான் அவன் அம்மாவின் முன்னாடி. சரி வாங்க கேக் வெட்டனும் இருங்கம்மா நான் போய் என் நண்பனை கூட்டி கொண்டு வாறேன். டேய் இந்தாட தலைகவசம் வேண்டாம் அடுத்த தெருதானே. டேய் பார்த்து மெதுவா போ சரி என்று கிளம்பினான் மின்னல் வேகத்தில்.
சிறிது நேரத்தில் வீட்டின் தொலைபேசி ஒலித்தது. கண்மணி போன் அடிக்கிறது கேட்கவில்லையா எடுத்து பேசு சரிங்க. போனை எடுத்த கண்மணி மயங்கி கீழே விழுந்தார். பதறி ஓடிய கிருஷ்ணன் மற்றும் பணியாள் சுமதி ஓடி போய் தூக்கினார்கள். போனை எடுத்து தொடர்ந்து பேசிய கிருஷ்ணன் கண்கலங்கினார். தங்கள் மகன் சுந்தர் தலையில் அடிப்பட்டு சாலையில் இறந்தார் என்ற செய்தியை கேட்டதும்.
காயம் என்னவோ சிறிது தான் ஆனால் இறத்த போக்கு அதிகம் ஆனதால் இறந்தான் என்றார்கள் மருத்துவர்கள் இவர் தலையில் தலைகவசம் அணிந்து இருந்து உயிர் பிழைத்து இருக்கலாம் என்றனர்.
தலைகவசம் உயிர் கவசம் என்று கூறி தாய் கண்மணி கொடுத்ததை உதாசினப்படுத்தி சென்றதால் வந்த விளைவுகள் இது .
இறுதியாக வேக வேகமாக பிள்ளைக்காக சேர்த்த பொன்-பொருள்கள் பயனற்றதாய் போனதும். அவர்கள் மகன் சுந்தருக்காக அன்பை சேர்க்க மறந்ததும் நற்பண்பை வளர்க்க மறந்ததும் நன்மை தீமைகளை நயம்பட குழந்தைகளுக்கு எடுத்து கூறாமல் பொருள் தேடியே வாழ்வை தொலைத்தயையும் எண்ணி மனம் வருந்தினர்.
மகன் சுந்தருடன் வாழ பாக்கியம்மற்று அவன் நினைவாகவே புவியில் வாழ்ந்தனர்…
எதிலும் மித வேகம் மிக நன்று மின்னல் வேகம் சாலைக்கும்(வாழ்க்கைக்கும்)அன்று….
நன்றி
கவிஞர் மா.கணேஷ்