கவிதைகள்வாழ்வியல்

காமராசர்! கவிஞர் இரா. இரவி

முதல்வர்களின் முதல்வராகத் திகழ்ந்தவர் காமராசர்
முத்தாய்ப்பாக முத்திரையை நன்கு பதித்தவர்!

பசியாற்றி கல்வியையும் வழங்கிய வள்ளல்
பண்பில் குன்றாக என்றும் திகழ்ந்தவர்!

எளிமையின் சின்னமாக என்றும் வாழ்ந்தவர்
ஏழ்மையின் கொடுமையை நன்கு உனர்ந்தவர்!

அன்னையே அன்பாக அவரிடன் கேட்டபோதும்
அவர் முப்பது ரூபாய் கூடுதலாக அனுப்பாதவர்!

இலஞ்சம் ஊழல் என்றால் என்னவென்று அறியாதவர்
எப்போதும் நேர்மையாக நாணயமாக இருந்தவர்!

கல்வியில் மாபெரும் புரட்சி விதைத்தவர்
கல்விச் சாலைகளின் எண்ணிக்கையை உயர்த்தியவர்!

ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்லியே
அனைத்தும் முடிந்தவரை செய்து முடித்தவர்!

வரவில்லை என்று சொல்லிவிட்டு தொண்டர் இல்லம்
வந்து திருமணத்தில் வாழ்த்திய மாமனிதர்!

வருகிறேன் என்று சொன்னால் தொண்டர்
வழியெல்லாம் தோரணம் கட்டி செலவு செயவர் என்பதனால்!

பத்து வாங்கினால் ஒன்று உங்களுக்கு என்றனர்
பதினொன்றையும் அரசில் வரவு வை என்றார் மகிழ்உந்தை!

பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தபோதும் மறுத்து
பிரதமர்களைத் தேர்வு செய்து தந்தவர்!

முதலமைச்சர் பதவிக்கு அழகு சேர்த்தவர்
முக்காலமும் போற்றிடும் புகழைப் பெற்றவர்!

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *