புத்தகப் பூங்கா! – கவிஞர் காரை வீரையா
( கிராமப் பஞ்சாயத்துதோறும் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் கிராமப்புற மக்கள் அனைவரும் படித்துப் பயன்
பெறுவதற்கு ஏதுவாக ஒரு பாடல் இதோ.)
எல்லோருக்கும் உலகம் இதுதான் – இதுல ரகசியம் ஏதுமில்லே கிளியே பச்சைக்கிளியே- நாம
நல்லா இருக்கத்தான் இங்கே வந்தது பூங்கா
புத்தகப் பூங்கா ஆ ஆ ஆ இதுவொரு புதுமையான பூங்கா- இத…
கொண்டுவந்த பெரியவங்க ஆஆஆ… – இதக் கொண்டுவந்த
பெரியவங்க பெருமையோட சிரிக்கிறாங்க பாரு கிளியே பச்சைக்கிளியே !
(எல்லாருக்கும்)
சுப்பா குப்பா ஆஆஆ… சுப்பா குப்பா என்னப் பாருங்கப்பா
ஓய்வில்லாமல் ஒக்காந்து படிக்க இங்கே வந்து போங்கப்பா
காமாட்சி மீனாட்சி ஓரங்கட்டி ஒதுக்கி நிக்காதீங்க
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் படிச்சு பாரும்மா
ஒசரத்திலே உங்க வாழ்க்கை நிலைக்கப் போகுதே!
(எல்லாருக்கும்)
வானத்திலே கோடிக்கணக்கான மீனுக்கூட்டம் – அதுவும்கூட
நாலு எழுத்து தேடித்தேடி படிக்க அலைமோதுதே
நாம மட்டும் நாலுவரி படிக்காட்டி நல்லா இருக்குமா?
நம்ம வாழ்க்கைப் பயணம் நல்லாத்தான் இனிக்குமா?
நன்றி
கவிஞர் காரை வீரையா