கடிகாரம்! கவிஞர் இரா. இரவி
ஓய்வின்றி உழைக்கு. உன்னத உழைப்பாளி
ஓயந்தால் மதிப்பை இழந்து விடும் உண்மை
உழவனுக்கு இது அவசியம் இல்லை
ஒவ்வொரு பொழுதையும் வானத்தில் அறிந்திடுவான்!
முட்கள் நகர நகர பலருக்கு
முன்னேற்றம் வாழ்வில் நிகழ்ந்து விடுகின்றது!
இருபத்தி நான்கு மணி நேரம் என்பது
எல்லோருக்கும் பொதுவான ஒன்று!
ஏற்ற இரக்கம் பாரபட்சம் இல்லை
எல்லோரும் பொன்னாய் மதிப்பது இல்லை!
பொன்னாய மதிப்பவர்கள் சாதனை புரிகின்றனர்
பொழுதுபோக்காய் நினைத்தோர் தேங்குகின்றனர்!
காலத்தை மதிப்பவனுக்கு கண் போன்றது
காலத்தை மதிக்காதவனுக்கு புண் போன்றது!
காலையில் தொடங்கி கண்மூடும் வரை
காலம் காட்டி வழிநடத்தும் வழிகாட்டி!
நதியைப் போலவே ஓடிக்கொண்டே இருக்கும்
நல்ல நேரம் கெட்ட நேரம் இதில் இல்லை!
எல்லா நேரமும் நல்ல நேரமே அறிந்திடுக
எமகண்டம் என்பதெல்லாம் கட்டிவிட்ட கதைகள்
யாருக்காகவும் தாமதித்து ஓடுவது இல்லை
யாரைப் பற்றிய கவலையின்றி கடமையைப் புரியும்!
நன்றி
கவிஞர் இரா.இரவி