பாவேந்தர் பாரதிதாசன்
புதுவை தந்த
புரட்சி கவி
பாரதிதாசன்..!
கனகசபையின்
கலைக்கவி
பாரதிதாசன்..!
இலக்குமியாரின்
இனியகவி
பாரதிதாசன்..!
பழநியம்மாளின்
பாசக்கவி
பாரதிதாசன்..!
கனகசுப்புரத்தினமான
இரத்தின கவி
பாரதிதாசன்..!
பாரதியாரின்
பா கவி
பாரதிதாசன்..!
சாகித்ய அகடாமி பெற்ற
சாதனைக் கவி
பாரதிதாசன்..!
குயில் இதழின்
குவலயக்கவி
பாரதிதாசன்..!
புதியதோர் உலகம் செய்த
புரட்சி கவி
பாரதிதாசன்..!
தமிழுக்கும் அமுதென்று பேர் என்று கூறிய
தமிழ்கவி
பாரதிதாசன்..!
எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்
மங்காத தமிழென்று
சங்கே முழங்கு என்ற
தமிழ் சங்க கவி
பாரதிதாசன்..!
கட்டளை கலித்துறை
பா பாடிய கவி
பாரதிதாசன்..!
இன்பக் கடல் தந்த
இனிய கவி
பாரதிதாசன்..!
அழகின் சிரிப்பால்
சிறந்த கவி
பாரதிதாசன்..!
இசையமுது தந்த
இசைக்கவி
பாரதிதாசன்..!
இருண்ட வீடு தந்து
இருள் அகற்றிய கவி
பாரதிதாசன்..!
உலகம் உன் உயிரின் தந்த
உலகக்கவி
பாரதிதாசன்..!
எதிர்பாராத முத்ததின்
முத்துக்கவி
பாரதிதாசன்..!
கற்கண்டு தந்த
இன்சுவை கவி
பாரதிதாசன்..!
குடும்ப விளக்கின்
குவலயக்கவி
பாரதிதாசன்..!
சுயமரியாதை சுடரின்
சுடர் ஔிக்கவி
பாரதிதாசன்..!
பாவிற்கு ஒரு வேந்தர்
என்றும் எங்கள்
பாவேந்தர் பாரதிதாசன்..!
நன்றி
கவிஞர் மா.கணேஷ்