முடியரசன்! கவிஞர் மா.கணேஷ்
தேனி தந்த
தேன் கவி
முடியரசன்..!
பெரியகுளத்தில் பிறந்த
பெரிய கவி
முடியரசன்…!
சுப்புராயிலுவின்
சுந்தர கவி
முடியரசன்..!
சீதாலெட்சுமியின்
சீரிய கவி
முடியரசன்..!
துரைராசுவாய் இருந்த
கவியரசு
முடியரசன்..!
பாரதிதாசனின்
பாசக் கவி
முடியரசன்..!
காவிய பாவையின்
காவிய கவி
முடியரசன்..!
பூங்கொடியின்
பூக்கவி
முடியரசன்..!
வீரகாவியத்தின்
வீரக்கவி
முடியரசன்..!
பாடுங்குயிலின்
பார்க்கவி
முடியரசன்..!
தமிழ் முழக்கத்தின்
தலைமை கவி
முடியரசன்..!
வள்ளுவர் கோட்டத்தின்
வளமை கவி
முடியரசன்..!
எக்கோவின் காதலின்
எழுச்சி கவி
முடியரசன்..!
திராவிட நாட்டின்
வானம் பாடி
முடியரசன்..!
கவியரசு பட்டம் பெற்ற
காவியக் கவி
முடியரசன்..!
வீறுகவியரசன்
என்றும் எங்கள்
முடியரசன்..!
நன்றி
கவிஞர் மா.கணேஷ்