கவிதைகள்வாழ்வியல்

தொல்காப்பியர் ! கவிஞர் இரா .இரவி !

தொல்காப்பியத்தை திறம்பட யாத்திட்ட
தொல்காப்பியர் நாளை  என்றும் போற்றுவோம் !

கி .மு .ஐயாயிரத்தில் தோன்றிய இலக்கியம்
கற்கண்டு தொல்காப்பியம் தமிழின் மகுடம் !

இலக்கணம் கூறிய இலக்கியம் தொல்காப்பியம்
இதுபோல வேறு எந்த மொழியிலும் இல்லை !

எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்
என்று மூன்று அதிகாரங்கள் கொண்ட நூல் !

அகத்திணை புறத்திணை அத்தனையும் உண்டு
ஆழ்ந்து படித்தால் தமிழ் அறிஞர் ஆகலாம் !

தமிழ் இலக்கியத்தில் மூத்தநூல் யாத்தவர்
தாரணி போற்றும் தொல்காப்பியனார் !!

தொல்காப்பியம் போன்ற நூல் வேறு மொழியில்
தங்களுக்கு இல்லை என்று பொறாமை கொள்கின்றனர் !

எல்லாம் உண்டு நமது தொல்காப்பியத்தில்
என்ன இல்லை நமது தொல்காப்பியத்தில் !

படித்து அறிந்திட நமக்கு பொறுமை இல்லை
பண்பாடு அறிந்திட நமக்கு நேரம் இல்லை!

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு
கண்முடித்த தனமாக நெய் தேடும் தமிழன் !

தமிழால் தொல்காப்பியனாருக்குப் பெருமை
தொல்காப்பியனாரால் தமிழுக்குப் பெருமை !

தொல்காப்பியத்தின் பெருமையை அறிந்திடுவோம்
தொல்காப்பியரின் புகழினைப் பாடிடுவோம்.

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *