கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ (சென்றியு ) கவிஞர் இரா .இரவி

நூற்றால்
நூல் வராத பருத்தி
செம்பருத்தி !

பேசிக்கொண்டன
புரியவில்லை நமக்கு
எறும்புகள் !

நினைவூட்டியது
அவளை
வானவில் !

காயம்பட்ட
சோகம் இசைத்தது
புல்லாங்குழல் !

மீனவரின்
அட்சயப்பாத்திரம்
கடல் !

நம்ப முடியவில்லை
கண்ணால் கண்டும்
ஆட்டை விழுங்கும் பாம்பு !

அரசியல்வாதிகளின் பொய்
நூலாடையை
பொன்னாடை !

சுடுகாட்டிலும்
சிரித்தன
மலர்கள் !

கிளைகளை விட
நெடியது
வேரின் பயணம் !

உருவம் மட்டுமல்ல
சுவையும் பெரிது
பலா !

வருத்தத்தில் குழந்தை
குட்டிபோடவில்லை
மயிலிறகு !

யாதும் ஊரே யாவரும் கேளிர்
மெய்ப்பித்தன
அயல் நாட்டுப் பறவைகள் !

புதிய பொருளாதாரம்
மலட்டு விதைகள்
மலடாக்கியது நிலத்தை !

சிறுவனின்
வண்டிச்சக்கரம்
நுங்கு மட்டை !

பறித்த போதும்
சிரித்தன
மலர்கள் !

காணவில்லை கண்மாய்
ஊரில் இல்லை ஊரணி
உலகமயம் !

வருங்கால சந்ததிகளின்
வளம் அழிக்கும் பகைவன்
நெகிழி !

மரத்தை வெட்ட வெட்ட
பொய்த்தது
மழை !

ஆக்கிரமித்தது
உலகனேரி
மதுரை உயர்நீதிமன்றம் !

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *