வசந்தம் வருமா ?
( உலகம் இப்படிப் போய்க் கொண்டு இருக்கின்றதே என்று ஓர் இளைஞன் வேதனைப்பட்டு / சஞ்சலப்பட்டுப் பாடும் பாடல் இது. )
வசந்தம் வரும்போது என் வாழ்க்கையில் வறண்டு போன நதியும் நானும் ஒண்ணா அம்மா நீயே சொல்லு சொல்லு
உருண்டு திரண்ட உன் வயிற்றைக் கிழித்து
இருண்ட உலகம் பார்க்கவா நான் பிறந்தேன்
அம்மா நீயே சொல்லு சொல்லு
(வசந்தம் வருமா)
கள்ளம் கபடம் சூதுவாது
பொய்யும் புரட்டும் திருட்டும் பெரும் வெள்ளமெனக் கரைபுரண்டு ஓடினால் நானதில் நீந்தி வரமுடியுமா
அம்மா நீயே சொல்லு சொல்லு
வஞ்சமும் லஞ்சமும் நிறைந்த சுடுகாட்டில் கொஞ்சமும் அன்பு காற்று வீசாமற்போனால்
வசந்தம் வருமா என் வாழ்க்கையில்
அம்மா நீயே சொல்லு சொல்லு
வசந்தம் வரும் நாள் ரொம்ப தூரமா?
பால் வடியும் பூக்கள் தேன் கொடுக்குமா? மண்ணின் மைந்தனாக நான் ஆக முடியுமா?
பாவம் அழிந்து விமோசனம் பிறக்குமா? அம்மா நீயே சொல்லு சொல்லு.
(வசந்தம் வருமா)
நன்றி
கவிஞர்
க்காரை வீரையா