கவிதைகள்வாழ்வியல்

தனிமை !


தன்னை அறிய
செய்திடும்
தனிமை..!

தன்முனைப்பை
நீக்கிடும்
தனிமை..!

தவம் புரிய
செய்திடும்
தனிமை..!

தத்துவங்கள்
தந்திடும்
தனிமை..!

கவிஞர்களை
உருவாக்கிடும்
தனிமை..!

கவிதைகள்
பிறந்திடும்
தனிமை..!

காலத்தை
காட்டிடும்
தனிமை..!

இசையது
தோன்றிடும்
தனிமை..!

இனிமையாய்
இனித்திடும்
தனிமை..!

இன்னலாய்
இருப்தல்ல
தனிமை..!

இனிமைமனம்
தந்திடும்
தனிமை..!

ஞானஔி
தோன்றிடும்
தனிமை..!

ஞானத்தை
தந்திடும்
தனிமை..!

இருள் மனம்
அகற்றிடும்
தனிமை..!

அறிவு ஔி
பிறந்திடும்
தனிமை..!

மெய்ஞானம்
தந்திடும்
தனிமை..!

விஞ்ஞானம்
வளர்த்திடும்
தனிமை..!

அஞ்ஞானம்
அகற்றிடும்
தனிமை..!

மனவலிமை
வளர்த்திடும்
தனிமை..!

மன ஒருநிலை
படுத்திடும்
தனிமை..!

தற்பெருமை
போக்கிடும்
தனிமை..!

புத்தகங்கள்
படைத்திடும்
தனிமை..!

புகழ்பெற
வைத்திடும்
தனிமை..!

புத்துணர்ச்சி
தந்திடும்
தனிமை..!

மனகவலை
அகற்றிடும்
தனிமை..!

மனம் மகிழ
வைத்திடும்
தனிமை..!

அறியாமையை
அகற்றிடும்
தனிமை..!

அறிஞர்களை
உருவாக்கிடும்
தனிமை..!

அல்லல்களை
அகற்றிடும்
தனிமை..!

இனிமையை
தந்திடும்
தனிமை..!

இன்னலை
நீக்கிடும்
தனிமை..!

இடர்மனம்
களைத்திடும்
தனிமை..!

மலர்மணம்
வீசிடும்
தனிமை..!

படைப்புகள் பல
பிறந்திடும்
தனிமை..!

பாசத்தை
பெருக்கிடும்
தனிமை..!

பார் புகழ
வைத்திடும்
தனிமை..!

காவியங்கள்
தந்திடும்
தனிமை..!

இரைச்சலை
நீக்கிடும்
தனிமை..!

இன்னிசை
தந்திடும்
தனிமை..!

புலவர்களின்
பூ உலகம்
தனிமை..!

கவிஞர்களின்
கவி உலகம்
தனிமை..!

பாக்கள் பல
தந்திடும்
தனிமை..!

ஓவியங்கள்
தீட்டிடும்
தனிமை..!

வளமையை
தந்திடும்
தனிமை..!

வான்புகழ
வைத்திடும்
தனிமை..!

சிந்தனையை
சீராக்கிடும்
தனிமை..!

ஒற்றுமையை
உயர்த்திடும்
தனிமை..!

மாசற்ற
மனம்
தனிமை..!

மனசோர்வு
போக்கிடும்
தனிமை..!

மனவளம்
பெருக்கிடும்
தனிமை..!

இலக்கியங்கள்
இனித்திடும்
தனிமை..!

இனிமையை என்றும்
தந்திடும் இனியது
தனிமையே..!

நன்றி
கவிஞர் மா.கணேஷ்

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *