உண்மையான காதல் எது? – கவிஞர் காரை வீரையா
( காதல்ன்னு சொல்லி பெண்ணைக் கெடுத்து அப்புறம் கைகழுவி விடும் காதலன்களுக்கு புத்திபுகட்டும் பாடல்.)
தம்பி தம்பி தம்பி தம்பியோவ்
காதலுக்கு வாய்ப்பூட்டு போடாதே
காலம் அழிஞ்சாலும் காதல் அழியாது – நீ
காதல் சூதாட்டம் நடத்தி நடத்தி
கன்னிப் பெண்ணோட கற்பையெல்லாம் கிள்ளி கிள்ளி எறியாதே – வேண்டா வெறுப்பா காதல் பண்ணித் தொலைக்காதே ! – பொழுது
விடிஞ்ச நேரம் பார்த்து அவள
விரட்டி விரட்டி அடிக்காதே ! – உன்னோட வீட்டையும் நாட்டையும் நெனச்சுப்பாரு
உண்மையான காதல் உன் நெஞ்சுக்குள்ளே ஊறும் தம்பி… தம்பி…
(தம்பி தம்பி)
மானத்தோடு வாழ்த்தானே
மாத்தி மாத்தி அழுக்கில்லாம சட்டை போட்டுக்குறோம்
சொட்டுச் சொட்டாய் உடம்புபூரா
வேர்வைத்துளி கொட்டினாலும் கோவணத்தோடு மானம் காக்க நாம மறக்கலியே
காதலுக்காக கடமை கண்ணியம் கட்டுப்பாடு இந்த
மூன்றையும் வெதவெதச்சு அறுவடையாக்கணும் தம்பி….
இதனால்
சோஷலிசக் காதல் சொதப்பல் இல்லாமல் உண்மை
சொர்க்க பூமிக்குக் கொண்டுபோகும் தம்பி தம்பி!
(தம்பி தம்பி )
நன்றி
கவிஞர் காரை வீரையா