காதலுக்குப் பால் வார்க்கும் நாள்… கவிஞர் காரை வீரையா
அன்புதான் காதலுன்னு உனக்குத் தெரியாதா?
அன்பான வார்த்தைக்குள்ளே காதல் ஊத்து
சுரக்குதுன்னு உனக்குத் தெரியாதா? அன்பாலே அன்பாலே அந்த ஆண்டவனையே
ஆட்டி வைச்சு கூத்துப் பார்ப்பேன் உன்னோட கண்ணாலதான்
(அன்புதான்)
வானமே இருண்டுதான் போயிருச்சு – வத்தாத
ஜீவநதியே வறண்டுதான் போயிருச்சு – இந்த
தேசமே நடுங்கித்தான் போயிருச்சு – நல்ல நேசமே சுருங்கித்தான் போயிருச்சு – இது எல்லாமே உன்னோட அன்பான வார்த்தை என்கிட்டே இல்லாமப் போனதாலே
இப்பநான் உன் காதலுக்கு
தவியாய்த் தவிக்கிறேன் துடியாய்த் துடிக்கிறேன்
(அன்புதான்)
என்னோட ஆத்தாளும் அப்பனும் அன்பாலே
தொட்டில் கட்டி நித்தம் நித்தம் ஊஞ்சலாடி கொஞ்சிக் கொஞ்சி ரசிச்சாங்க – நீ இப்ப வேத்தாளா என்ன நெனச்சு வெறுத்து ஒதுக்கிற
வீரத்தை நெஞ்சிலே வெதைச்சு வச்சு நல்லா
வெளஞ்சு போன விவேகத்தை அறுவடையாக்கி இந்த
ஊரு ஜனம் அமைதியாக வாழுறதுக்கு பாவம் பண்ணுற படுபாவி மனுசங்கள அடித்து திருத்தி ஜெயித்து காட்டுற
நீதிய நெலைக்க வச்சு நாடுபூரா வெற்றிக்கொடி நாட்டுற ஆனா உன்னோட காதலுக்காக தவியாத் தவிக்கிறேன் துடியாத் துடிக்கிறேன்
பாசத்தையும் நேசத்தையும் நீயெனக்குப் பால்வார்க்கும் அந்த
நேரத்தைப் பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருப்பேன் காத்திருப்பேன்!
(அன்புதான்)
நன்றி
கவிஞர் காரை வீரையா