காதல்! கவிஞர் மா.கணேஷ்
அன்பு நிறைந்தது காதல்…
ஆனந்தம் தருவது காதல்…
இனிய உணர்வது காதல்…
ஈடுல்லா பாசம் காதல்…
உன்னத உறவது காதல்…
ஊடல் நிறைந்ததும் காதல்…
எங்கும் உள்ளது காதல்…
ஏவாள் கொண்டதும் காதல்…
ஐம்பொறியும் தூண்டிடும் காதல்…
ஒன்று பட வைத்திடும் காதல்…
ஓங்கி நின்றதும் காதல்…
ஔடதம் மனதுக்கு காதல்…
அஃது தான் இனிமையான காதல்…
நன்றி
கவிஞர் மா.கணேஷ்