காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள்!
1️⃣ காலையில் பற்களை துலக்காமல், வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்துவிட்டு 1 மணி நேரம் எதுவுமே சாப்பிடக் கூடாது.
2️⃣ காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் நமது குடல் சுத்தமாக்கப்படும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
3️⃣ பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் அதனால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், தலைவலியானது குறையும்.
4️⃣ அல்சர் உள்ளவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் படிப்படியாக குறையும்.
5️⃣ தண்ணீரை காலை எழுந்தவுடன் குடித்து வர வாய் துர்நாற்றத்தை தடுக்கும் மற்றும் பற்களில் இருக்கும் கிருமிகளையும் சேர்த்து வெளியேற்றும், புத்துணர்ச்சியை கொடுக்கும்.
6️⃣ குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கலாம்.
7️⃣ உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வர அது உடல் எடையை குறைக்க உதவும்.
நன்றி..... ஆதியா