தொழில்நுட்பம்கைபேசி

இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி9 பிளஸ் விவரங்கள்

மோட்டோரோலா நிறுவனத்தின் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோ ஜி9 பிளஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி9 பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது. அந்த வரிசையில் இந்த ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


இதில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ஸ்கிரீன், குவாட் கேமரா சென்சார்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் எஃப்சிசி வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. 

எனினும், இதில் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர், கேமரா சென்சார்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறவில்லை.

202009081358427868 1 Moto G9 Plus Leak. L styvpf

மோட்டோ ஜி9 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

  • – 6.81 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+LTPS LCD டிஸ்ப்ளே
  • – 4 ஜிபி ரேம்
  • – 128 ஜிபி மெமரி
  • – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • – டூயல் சிம் ஸ்லாட்
  • – 64 எம்பி பிரைமரி கேமரா
  • – அல்ட்ரா வைடு சென்சார்
  • – மேக்ரோ விஷன் சென்சார்
  • – டெப்த் கேமரா
  • – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • – 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • – ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

புதிய மோட்டோ ஜி9 பிளஸ் ஸ்மார்ட்போன் ரோஸ் கோல்டு நிறத்திலும் கிடைக்கும் என தெரிகிறது.

Source : https://www.maalaimalar.com/technology/technologynews/2020/09/08135844/1865776/Moto-G9-Plus-with-68inch-FHD-display-64MP-quad-rear.vpf

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *